பக்கம்:மணிவாசகர்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லாற்றுப் பகுதியில் ஒன்றாகிய சிவபெருமான் திருநல்லூரின் கண் அந்த அப்பர் பெருமான் வேண்டுகோளின் படி அவர் திருமுடிமேல் தனது திருவடியை வைத்ததின்கண்:ஈடுபட்டு மனங்குளிர்ந்ததைக் காணின் அவர் துன்பம் அறிந்து புழுங் கிய நமது உள்ளமும் குளிருமாகலால் அதனை அறிந்து மேற் செல்வோமாக. அது,

  • துடிவைத்த செங்கை யரசேநல்லுரினின் றுமலர்ப்பொன்

அடிவைத்த போதெங்க ளப்பர்தஞ் சென்னி யதுகுளிர்ந்தெப் படிவைத்ததோ வின்பு மியானெனுங் தோறுமிப் - பாவிக்குமால் குடிவைத்த புன்தலை யொன்றோ மனமுங் -

  • குளிர்கின்றதே"

என்பது, இனி, ஆண்டவன் அடிகளின் பொருட்டு மண் சுமந்து மாறனால் மாறடி பட்டதை நினைந்து அடியார்களின் உள்ளம் புழுங்குமென்பதையும், அங்ங்ணம் புழுங்குவதற்குக் காரணம் அவர்களுடைய அன்பே என்பதையும் குமரகுருபர அடிகள் திருவாரூர் நான்மணிமாலையுட் கூறிய, என்பணிந்த தென்கமலை ஈசனார் பூங்கோயில் முன்பணிந்த தெய்வ முனிவோர்கள்-அன்பென்னாம் புண்சுமந்தோ நந்தி புடைத்தென்னார் புண்ணியனார் மண்சுமந்தா ரென்றுருகு வார்' என்னுஞ் செய்யுளால் நன்கு அறியலாம். எனவே, அடியார்க்கெளியனாகிய ஆண்டவன் தம் பொருட்டுச் செய்த அருளிப்பாடுகளனைத்தையும் உன்னி யுன்னி உருகும் நமது அடிகள் கருத்தில் யாது தோன்றியிருக் கும்? அவ்விறைவனுக்குக் கைமாறாகத் தாம் யாதேனுஞ் செய்யக் கருதுதல் அறிவுடைய மக்களின் இயல்பேயன்றோ? அங்ங்னங் கருதிய அடிகள் தங்கூர்த்த மதியால் எண்ணி 139.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/139&oldid=852480" இலிருந்து மீள்விக்கப்பட்டது