பக்கம்:மணிவாசகர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுத்திட அகத்துவகை வெள்ளமடுத்திட, முகிழ்த்த கைம் மலர்க்கமலம் உச்சி தொடுத்திட, விழிப்புனல் துளித்திட வினைக்கே விடுத்திடு மனத்தருள் விளைந்திட நடந்து ஓ! ஈதென்ன வியப்பு! என்னுட்பல இன்பங்கள் நிகழ்கின்றன என்னைப் பிணித்திருந்த கட்டு ஒன்று நீங்கினது போலுந் தோன்றுகின்றது; என் தலையில் ஏற்றியிருந்த சுமை ஒன்று இறங்கினாற்போலுங் காண்கின்றேன்; நெருப்பிலிடுவெண் ணெயென நெஞ்சுருக என்னை உருக்கு' கின்றது; இவற் றால் 'எனை ஒளித்த மல ஆற்றல் கருக்குமவனாகி எனை ஆள்கருணை வள்ளல் இருக்குமிடனே இது'வென எண்ணி நகரிற் புகுந்து நீராடித் திருக்கோயிலுட்புக்கு வலமாக வருகின்றார். - வரும்பொழுது ஆங்குள்ள குருந்த மரத்தினடியில் தம்மை ஆட்கொள்ளும் பொருட்டு ஓர் அந்தணக் குலக் குரவனாகி வேதநூல் ஒருமருங்கின் மிளிரவும், சைவப் போதநூல் ஒருபுடையில் திகழவும், கீத நூல் ஒரு சிறை யினிற் கிளரவும் சமய பேத நூல் ஒரு பக்கலில் வாய்விட்டுப் பிறங்கவும், மற்றொருபுறத்தில் சரியையாதி நாற்பாத முந் தலை தெரிந்துணர்ந்த பெரிய மாணவர் கழகம் வினா விடை பேசவும், பிறிதொரு பக்கலில் சரிதை வல்ல மெய்த் தொண்டரும் சம்புவுக்கினிய கிரியை செய்யு நன்மைந்தரும் கிளர் சிவயோகம் தெரியுஞ்சாதகக் கேளிருந் தேசிகத்தன்மை புரியும் போதகச் செல்வரும் அளப்பிலர் பொலியவும், வேறொரு மருங்கில் பாசங் கழித்த கண்களால் அரனுருக் கண்டு கொண்டுலகில் விழித்த கண்குருடாகிய வீரர்பலர் ஒழித்த நோன்பினராய் ஆடுகின்றவராய்ப் பாடுகின்றவராய் உலகம் பழித்த செய்கையராய் அழுதலையுடையராய் நகை யினையுடையராய்த் திரியவும், பிறிதோரிடத்திற் கோவன உடையும் கைப்பலி உண்டியும் அடியார் உறவும் கலன் கண்டியும் பார்படுக்கையுமாகக் கொண்டு பகல், இரா, முதல், ஈறு, இடையில்லா விடத்து உறங்கும் வாழ்க்கையை மேற்கொண்ட விஞ்ஞையர் பலர் "கரவிலுள்ளமாம் விசும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/14&oldid=852482" இலிருந்து மீள்விக்கப்பட்டது