பக்கம்:மணிவாசகர்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யெண்ணிப் பார்த்து எல்லாம்வல்ல முழு முதற் கடவுளுக்கு ஒன்றுக்கும் பற்றாத அடியேனாற் செய்யக்கிடப்பது யாது? ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு வந்து, அதனைத் தமது மணிவாசகத்திற் பலவிடங்களிலும், 'மற்றறி யேன் செய்யும் வகை' என்றும, 'யானிதற் கிலனோர் கைம்மாறே' என்றும், - 'உண்டாமோ கைம்மாறுரை' என்றும் கூறிவிட்டு, தாம் ஆண்டவனுக்கு ஒரு பேரன்பனாக இருக்க வேண்டுமென்னும் முடிவுக்கு வந்தார். 'அன்பலாற் பொருளு மில்லை ஐயன் யாறனார்க்கே” என்னும் அப்பரடிகளின் அருளிப்பாடு இங்குக் கருதத்தக்கது. அங்ஙனம் முடிவு செய்த நமது அடிகள் அந்த அன்புக்கு ஒர் வரையறை செய்தார்; எங்ங்னமெனின், இத்துணை அருள் செய்த அவ்விறைவனை இடையறாமல் நினைந்து நினைந்து உள்ளந்தாளிலிருந்து உச்சியளவும் உள்ளமாக இருந்து உருக வேண்டும்; உடம்பு முழுதுங் கண்ணாக இருந்து இன்ப அருவி பெருக்க வேண்டும் என இக்கருத் தினை அடிகள் ஒரு திருப்பாட்டால் விளக்குதல் காண்க, அப்பாட்டு:- - - 'வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப் பள்ளந்தா ழுறுபுனலிற் கீழ்மேலாகப் பதைத்துருகுமவர் நிற்க என்னை யாண்டாய்க்(கு) - உள்ளந்தான் கின்றுச்சி யளவுநெஞ்சாய் உருகாதால் . - உடம்: எல்லாங் கண்ணாய் அண்ணா வெள்ளந்தான் பாயாதா னெஞ்சங் கல்லாங் கண்ணி ணையு மரமாந்தீ வினையி னேற்கே" என்பது. 140

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/140&oldid=852484" இலிருந்து மீள்விக்கப்பட்டது