பக்கம்:மணிவாசகர்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரஞ்சோதி முனிவர் திருவாசகப் பயிற்சி மிகுதியால் "அழுதடி அடைந்த அன்பர்' என மணிவாசகனாரைக் கூறி னாரென மேலே காட்டியதற்கு ஏற்ப அத் தொடரைத் திரு. வாசகக் கருத்துக்கு மாறுபடாமல் அதிலுள்ள ஆதரவுகளைக் கொண்டே வகுத்தும் விரித்தும் கூறினேம். இன்னும் அத் தொடரை ஈற்றடியிற்கொண்ட 'எழுதருமறைகள் தேறா" எனும் (இது மேலே காட்டப்பட்டது) செய்யுளில் அடிகள் இடையறாது பூசனைபுரிந்து அழுது ஆண்டவன் அடி .யடைந்தார்' எனக் கூறப்படுவதால் அதற்கு அப்பரஞ்சோதி முனிவர் திருவாசகத்திற் கண்ட ஆதரவுகளையும் காண்போ LDIT & . o Gongly, - 'பாசவே ரறுக்கும் பழம்பேரருள் தன்னைப் பற்றுமாறு அடியனேற் கருளிப் பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து பூங்கழல் - காட்டிய பொருனே தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தி செல்வமே சிவபெரு மானே ஈசனே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுங் தருளுவ தினியே' 'சித்த மேபுகுந்து எம்மை யாட்கொண்டு தீவினைகெடுத் துய்யலாம் பத்தி தந்துதன் பொற்க ழற்கனே பன்மலர் கொய்து சேர்த்தலும் முத்தி தந்திந்த மூவுலகுக்கும் அப்புறத்து எமை வைத்திடும் அத்தன் மாமலர்ச் சேவடிக் கணஞ் சென்னி மன்னி மலருமே' என்பன. வாழ்க மணிவாசகரின் மலரடி முற்றிற்று 142

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/142&oldid=852488" இலிருந்து மீள்விக்கப்பட்டது