பக்கம்:மணிவாசகர்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறும் அவ்விலக்கியங்களை ஆக்கித் தந்த புலவர்கள் வரலாறும், அவர்கள் வாழ்ந்த காலம் பற்றிய குறிப்பும் இன்று நமக்குக் கிடைக்கவில்லையே ஏன்? மாபெரும் நூல்களை ஆக்கித் தந்த நம் புலவர்களை அடியோடு மறந்துவிடும் நன்றி கெட்டவர்களா தமிழர்கள்? ஒருவேளை இவைபற்றிக் கவலைப்படாமல் இருந்துவிட்ட னர் என்று கூறிவிடலாமா என்றால் அதுவும் இயலாது. ஏன் எனில் இந்நூல்களை எல்லாம் இரண்டாயிரம் ஆண்டு களாகக் காத்து இன்று நாம் கற்கும் வண்ணம் வழங்கியவர் கள் இந்நூற்களின் ஆசிரியர்களைப்பற்றி மட்டும் கவலைப் படாதவர்கள் என்றோ, ஆசிரியர்களை மறந்த நன்றி கெட்டவர்கள் என்றோ கூறுவதும் பொருத்தமாக இல்லை. அப்படியானால் இதற்கு ஏதேனும் ஒரு காரணம் இருந்திருத் தல் வேண்டும். . * எதனை வரலாறு என்ற பெயரால் இன்று பேசுகிறோம்? எந்த வரலாற்று நூலை எடுத்துப் பார்த்தாலும் மன்னர் களின் வாழ்க்கை அவர்கள் பட்டத்திற்கு வந்த தேதி, அவர் கன் நடத்திய போர்களின் வருணனை, காலக் குறிப்புகள், என்பவைதாம் வரலாறு என்ற பகுதியில் இடம் பெறு கின்றன. ஆனால், இதுவா உண்மையான நாட்டு வரலாறு? தனி மனிதர்களாகிய அரசர்கள் வாழ்க்கைபற்றி அறிந்து நமக்கு ஆகப்போவதென்ன? ஒரு நாட்டின் வரலாறு என்றால் அந்நாட்டில் வாழும்மேக்கள் என்ன நினைந்தனர், என்ன குறிக்கோள் கொண்டிருந்தனர், என்ன உண்டனர், யாருடன் எவ்வாறு பழகினர் என்பவற்றைத்தாமே அறிவித் தல் வேண்டும். இக்கருத்தைத்தான் தாமஸ் கார்லைல்’ என்ற பேரறிஞர், பாஸ்வல் எழுதிய ஜான்சன் என்ற 'நூலின் ஒரு பதிப்பிற்குத் தாம் எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்நாட்டு வரலாற்று அறிஞரான பி. டி. சீனிவாச அய்யங்கார் தாம் எழுதிய 'பண்டைத் தமிழர் வரலாறு' என்ற நூலின் முகவுரையில் 'கால முறையை அறிந்து அதன்படி நிகழ்ச்சிகளைக் கூறுவது தான் வரலாற்றின் கண்போன்ற சிறந்த பகுதி என்று நினைப்பதானால் தென்னாட்டு வரலாறு என்றும் குரு 146

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/146&oldid=852495" இலிருந்து மீள்விக்கப்பட்டது