பக்கம்:மணிவாசகர்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாகவே இருக்க நேரிடும். ஆனால், வரலாறு என்ற சொல். லுக்கு மக்களின் நாகரிகம் பண்பாடு என்பவற்றை அறிதல் தான் பொருள் என்று கொண்டால் தென்னாட்டு வர லாற்றை அறியச் சங்க நூல்கள் உண்டு' என்று கூறினார். அவ்வாறானால் தமிழர்கள் தம்முடைய இனத்தில். தோன்றிய பெரியோர்களைப் பற்றிய குறிப்புக்களை ஏன் திரட்டி வைக்கவில்லை? அவர்கள் நூல்களை மட்டும் பாது காத்துக்கொண்டு அவர்கள் வாழ்க்கை வரலாற்றை ஏன் காற்றில் விட்டனர்? ஆழ்ந்து சிந்தித்தால் இதில் ஒர் உண்மை அடங்கி இருப்பதைக் காண்டல் கூடும். ஒப்பற்ற கவிஞனேயாயினும் அவன் இன்ன சமயத்தைச் சேர்ந்தவன். இன்ன கொள்கை உடையவன், இன்ன காலத்தில் வாழ்ந்த வன் என்ற விவரங்கள் அறியப் பெற்றவுடன் அதனால் விருப்பு வெறுப்புக் கொள்பவர் நிறைந்தது இந்தச் சமுதா யம். திருவள்ளுவன் என்ற தெய்வப் புலவன் ஆக்கித் தந்த, உலகம் போற்றும் திருக்குறளை இன்று வேண்டா என்பார் யார்? ஆனால், அவன் சைவன் என்றோ, வைணவன் என்றோ,சமணன் என்றோ அறியப்பட்டிருப்பின் இத்தனை நூற்றாண்டுகள் அதனைப் பாதுகாத்து வைத்திருப்பார் களா என்பது ஐயத்திற்கு இடமானதுதான். கம்பனுடைய நூல் வைணவ சமயத்தைச் சார்ந்தது என்பதற்காக அதனைத் தொடாத சைவப் பெருமக்களும், திருவாசகம் சிவபெருமானைப் பற்றிப் பாடுவதால் அதனைத் தொடா மலும், அப்பெயரை உச்சரிக்காமலும் இருக்கின்ற வைணவப் புலவர்களும் இற்றை நாளிலும் இருக்கின்றனரே! அப்படி இருக்க பன்னுாறு ஆண்டுகளின் முன்னர் இந்த விவரம் அறியப்படுமானால் காழ்ப்புக் கொண்ட மக்கள் திருக்குறளையல்லவா படியாமல் ஒதுக்கி விடுவர்! மேலும் 1. “If Chronology is the eye of History then South indian History should always remain blind. If by history you mean the the custure and civilization of the people. then South Indian History abounds in materias” 147

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/147&oldid=852497" இலிருந்து மீள்விக்கப்பட்டது