பக்கம்:மணிவாசகர்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னர் வாழ்ந்த இரஷ்யநாட்டுத் தலைவர் ஸ்டாலினை. யும், இப்பொழுது வாழும் சீனத்தலைவர் மாசேதுங்கையும் பார்த்தால் இவ்வுண்மை நன்கு தெரியும். மாசேதுங்கின் உபதேசங்களைப் பயிர்கட்கு ஒலிபெருக்கி மூலம் கூறினால் அவை செழித்து வளர்கின்றன என்று அவர்கள் நம்பும் அளவிற்குத் தனிமனித வழிபாடு இட்டுச் செல்கிறது. இது, எத்துணைத் தீமை பயக்கும் என்பதை ஸ்டாலின் வாழ்ந்த காலத்தும் அவர் மறைந்த காலத்தும் ஏற்பட்ட நடவடிக்கை களைப் பார்ப்பதன்மூலம் அறிந்து கொள்ளலாம். இவற்றை அல்லாமல் மற்றோர் உண்மையையும் அறிதல் வேண்டும்" " எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் (423) என்ற குறளுக்கு உரை வகுத்த பரிமேலழகர் குணங்கள் மூன்றும் மாறி மாறி வருதல் யாவர்க்கும் உண்மையின், உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும்,:இழிந்த பொருள் உயர்ந் தார் வாயினும், உறுதிப் பொருள் பகைவர் வாயினும், கெடு பொருள் நேட்டார் வாயினும் ஒரோவழிக் கேட்கப்படுத லால் எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் என்றார் என்று எழுதிச் செல்கிறார். இந்த அடிப்படையில் கண்டால் சிறந்த நூலை ஆக்கித் தந்த ஒருவன் தனிப்பட்ட வாழ்க்கை யில் மட்டமானவன் என்று தெரிந்தால் அவன் நூவைக் கற்பார் வெறுப்படைவரன்றோ? மார்க்கஸ் அரேலியஸ் என்ற உரோமப் புவிச் சக்கர் வர்த்தியின் தனிப்பட்ட வாழ்க்கை மிக மட்டமானது; அவ ருடைய சிந்தனைகள்' என்ற நூல் மிக உயர்ந்தது. ஆனால் அவரைப் பற்றி அறிந்த பிறகு அவருடைய நூலை யாரும் விரும்பிப் படிக்க முன்வரார் அன்றோ? இத்தகைய இடையூறுகளிலிருந்து மக்கள் காக்கப்பட வேண்டுமாயின் ஒரே வழி, நூலை மட்டும் போற்றிக் கொண்டு நூலாசிரியனைப்பற்றி அதிகம் கவலைப்படா திருப்பதேயாகும். பருவுடலோடு, சமுதாயச் சட்டதிட்டங் கட்குக் கட்டுப்பட்டு வாழ்ந்த நூலாசிரியன் ஒருவன். ஆனால், அதே நூலாசிரியன் அனைத்துக் கட்டுக்களையும் 149

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/149&oldid=852501" இலிருந்து மீள்விக்கப்பட்டது