பக்கம்:மணிவாசகர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடைக் காசற விளங்கும், பரசிலாச் சுடர்க்குதயம் ஈறின் மையாற் பகலும், இரவும் நேர்படக் கண்டிலரியன்று செய் நித்த, விரதமாதி நோன்பிழந்து உறை'யவும் இருத்தலைக் கண்டனர். காண்டலும் அவ்வாசிரியன் அருட்குறிப்பு உள்ளத்தின் கண் உணர்த்த 'மன்றுளாடிய ஆனந்தவடிவமும் வடவால், ஒன்றி நால்வருக் கசைவற உணர்த்தியவுருவும், இன்று நாயினேற் கெளிவந்த இவ்வுருவமே' என்று உணர்ந்து முன் பணிந்து அஞ்சலி முடிமேல் அணிந்து என்புநெக்கிட உருகித் துன்ப வெம்பவவலை அறுத்திட வலையிற்பட்ட னர்; ஆண்டவனாகிய அவ்வருட்குரவன் அடிகளின் உடல், பொருள், உயிர் மூன்றையும் நீருடன் வாங்கிக் கொண்டு அருட் கண்ணினால் மலத்தைப் போக்கித் திருவடியை முடியிற் சூட்டிச் செங்கரத்தைச் சென்னியில் வைத்துச் சூக்குமமாகிய திருவைந்தெழுத்தை உபதேசித்துப் பார்த்த பார்வையால், இரும்புண்ட நீரெனப் பருகும் அத்தீர்த் தன் தன்னையுங் குருமொழி செய்ததுந் தம்மைப், போர்த்த பாசமும் தம்மையு மறந்து மெய்ப்போத மூர்த்தியாயொன் றும் அறிந்தில' ராகிய வாதவூர் முனிவர் நாவின்கண் ஞான வாணி வந்து தங்க அவ்வருட்குரவன் அளித்த இன்ப மானது 'தேனும் பாலும் தீங்கன்னலுமமுதுமாய்த் தித்தித்து ஊனையும் என்பினையும் உருக்க, உள்ளொளியுணர்ந்து தொழுத கையினராய்த் துளங்கிய முடியினராய்த் துளும்ப அழுத கண்ணினராய்ப் பொடிப்புறும் யாக்கையராய் தாக்குத் தழுதழுத்த அன்புரையினராய்த் தமை இழந்தவ ராய் அழல்வாய் இழுதையன்ன மெய்யினராய் நின்று இன்பமாகிய ஆறானது உள்ளமாகிய ஏரியின்கண் நிறைந்து புறத்திற் கசிந்தாற் போன்று துதிப்பாராயினர். அப் பொழுது, . . . . - "பழுதி லாதசொன் மணியினைப் பத்திசெய் தன்பு முழுது மாகிய வடத்தினான் முறைதொடுத் தலங்கல் அழுது சாத்து மெய்யன்பருக் ககமகிழ்ந் தையர் வழுவி லாதபேர் மாணிக்க வாசக னென்றார்" என்று அவர் வரலாற்றின் மூலமாக அறிந்தோம். 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/15&oldid=852503" இலிருந்து மீள்விக்கப்பட்டது