பக்கம்:மணிவாசகர்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகர்த்துவிட்டுத் தன் கற்பனைக்கு அல்லது கருத்துக்கு வடிவு தருகின்றான் எனில் அதுவே அவன் இயற்றிய நூலாகும். எனவே கால தேச வர்த்தமானங் கடந்த அவனு டைய நூலை மட்டும் எடுத்துக் கொண்டு, கால, தேச, வர்த்தமானத்துக்குக் கட்டுப்பட்ட அவனுடைய வாழ்க்கை யைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் விட்டுவிட்டனர். நம்முடைய முன்னோர் என்று கூறுவதில் தவறில்லை. துறவி இயற்றிய நூலை இல்லறத்தார் ஏற்க மறுக்கலாம். ஒர் ஊர்க்காரன் என்றால் பிற ஊர்க்காரர்கள் அதனை ஏற்க மறுக்கலாம். இவற்றை எல்லாம் கடந்தவன் என்று ஒவ்வொருவரிடமும் கூறிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் அவனுடைய வாழ்க்கை வரலாற்றை மறைத்து விடுவதன் மூலம் பிற்காலத்தார் ஒவ்வொருவரும் தத்தம் ஊரவன் என்றும், தத்தம் கொள்கையினன் என்றும், தத்தம் சமயத் தவன் என்றுங் கூறிக்கொண்டு அந்த ஆசிரியனைத் தம்மவ -னாக ஆக்கிக் கொள்ளப் பாடுபடுகின்றனர். அவன் வாழ்க்கை வரலாறுதெரிந்திருந்தால் பலரும் அவனை ஒதுக்க நேரிடும். ஆனால், இப்பொழுதோ எனில் அனைவரும் அவனைத் தம்முடையவனாகவே ஆக்க முந்துகின்றனர். எனவே, தமிழர்கள் வரலாற்று அறிவு படைத்தவர்களா யினும் எதிர் காலத்தை நெடிது நோக்கும் தம் கூர்த்த அறிவு காரணமாகவே இல்வாறு நூலாசிரியனைப் பற்றிய குறிப்புக்கள் சேகரிப்பதை விட்டுவிட்டனர் என்று கூறலாம். உதாரணமாக இளங்கோவடிகளை எடுத்துக்கொள் வோம். அவர் குணவாயிற் கோட்டத்து அரசு துறந்திருந்த சமணர் என்றும், சைவ சமயத்தைப் பின்பற்றியவர் என்றும் இருவேறு கருத்துக்களைக் கூற இடமுண்டு. ஆனால், அவ ருடைய நூலை மட்டும் எடுத்துக் கொண்டால் அவருடைய சமயம் இதுதான் என்று அறுதியிட்டுக் கூறல் முடியா தன்றோ? நுதல்விழி நாட்டத்து இறையோன்கோயில் (சிலம்பு 14-7) என்றும் தெண்ணிர்க் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின் (சிலம்பு 26.64, 85) என்றும் பாடியவர் ஒரு சைனர் என்றால் 150 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/150&oldid=852505" இலிருந்து மீள்விக்கப்பட்டது