பக்கம்:மணிவாசகர்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பதை மனத்துட் கொள்ள வேண்டும். எனவே திருவாச கமும், அதனை இயற்றிய மணிவாசகர் வரலாறும் திருநீறு. இட்டுக்கொண்டு, நடராசரைத் தரிசனம் செய்கின்ற சைவ மெய்யன்பர்கட்கு மட்டும் உரியது என்று இளஞ் சமு. தாயம் தயைகூர்ந்து நினைத்துவிட வேண்டா, வருங்காலத் தில் வாழ்வாங்கு வாழ்ந்து இந்நாட்டை உயர்வடையச் செய்ய வேண்டிய இளஞ்சமுதாயம் வீடுபேற்றைப் பற்றி இப்பொழுது கவலைப்படத் தேவை இல்லை. அப்படிப் பட்டவர்கட்கும் கூட இத்திருவாசகம் தேவைதான்! இந்த விஞ்ஞான யுகம் எவ்வளவு முன்னேறிச் சென்றா லும் மனிதன் சில அடிப்படை உண்மைகளை விட்டுவிட முடியவில்லை. ஆதிமனிதராகிய ஆதாம் ஏவாளுக் கிருந்தது. போலவே இன்றைய விஞ்ஞான யுக மனிதனுக்கும் பசி, தாகம், பால் உணர்வு, முதலியவை இருக்கின்றன. எனவே, பழமையிலிருந்து மனிதன் என்றைக்கும் தன்னை முற்றிலும் பிரித்துக் கொள்ளமுடியாது என்பது உறுதி. இதனிடையில் திருவாசகம் எத்துணைதுரம் முன்னோக்கிச் செல்பவர்கட்கும் இடந்தரக் கூடிய ஒன்று என்பதை மட்டும் அறிதல் வேண்டும். இந்த அணுயுகம் கண்ட ஒப்புநோக்குக் கொள்கை (Relativity Theory) முதல், அணுக்களின் சிற் றெல்லைவரைத் திருவாசகக்காரர் அறிந்திருந்தார் என்று. கூறினால் அது மிகைபடக் கூறல் போலத் தோன்றலாம். இவ்வாறு கூறுவதால் மணிவாசகர் ஐன்ஸ்டினின் முன் னோடி என்று கூற வரவில்லை. இத்துணை அறிவுப் பெருக்கமுட்ைய மணிவாசகர் கண்டவழி அறிவின் துணையை நாடி முன்னேறுகின்ற இந்த யுகத்திற்கும் பொருத்தமானதாகவே இருக்கும் என்பதுதான் தெளியப் பட வேண்டிய ஒன்று. . . . . . . . . . இத்தகைய பெரியோர்கள் ஆன்மிகத் துறையில் முன் னேறிச் சென்றதால், அறிவுத் துறையில் பயிற்சி இல்லாத வர்களோ என்று நினைத்துவிட வேண்டா. அறிவுத் துறையில் நெடுந்துாரம் முன்னேறிச் சென்று மீட்டும் — 19 . . . . . . . 153

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/153&oldid=852511" இலிருந்து மீள்விக்கப்பட்டது