பக்கம்:மணிவாசகர்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெரியாமல் அவை விரைவில் இறந்துவிடுவதும் மறுபடி யும் குதிரைகள் வாங்குவதும் இங்குப் பழக்கமாக இருந்து வந்துள்ளது. குதிரை வாங்க வேண்டும் என்று நினைத்த வுடன் கல்வி என்னும் பல்கடல் கரைகண்டவர் ஆகலின் திருவாதவூரரை அழைத்து அவரிடம் பொன்னைக் கட்டிக் கொடுத்தான். திருவாதவூரர் குதிரை வாங்கச் செல்லும் வழியில் உள்ள திருப்பெருந்துறையினுள் நுழைந்தவுடன் விட்ட குறை தொட்டகுறை காரணமாக ஒரு நிகழ்ச்சி நடந்தது. முற்பிறவிகளில் எங்கு விட்டோமோ அங்கிருந்து இப் பிறவியில் தொடர்கிறோம் என்ற நம்பிக்கை பிற நாடு களிலும் இருக்கக் காண்கிறோம். கணித மேதை. இராமா னுஜம், செவிடராகிய இசை மேதை பீத்ஹோவன், இன்று நம்மிடையே வாழும் வயலின் மேதை யாதி மெனுஹறின் போன்றவர்கள் மிக இளம் பருவத்திலேயே தங்கள் துறை களில் ஈடு இணையற்று விளங்கினர். தருக்க ரீதியிலும் வேறு வழியிலும் இத்தகைய கருவில் திருவுடையவர்களின் வளர்ச்சிக்குக் காரணம் கூற முடிவதில்லை. எனவேதான், இது ஏதோ ஒரு பிறவியில் விடப்பட்டு இப்பொழுது தொடர்ந்து வருகிறது என்று கூறுகிறோம். ஒவ்வொருவர் வாழ்விலும் சில சந்தர்ப்பங்களில், ஒவ் வொரு நிகழ்ச்சி, புதிய ஒரு வழி வகுத்துத் தருகிறது. திண் -ணனாராகிய கண்ணப்பர் வேட்டையாடிச் செல்கையில் ஒரு மலை எதிர்ப்படுகிறது. அப்பொழுதுதான் அம்மலை யைக் கண்டாராகலின் உடனிருந்த நாணன் என்ற ஏவலாள னிடம் இது யாது என்று வினவுகிறார். அவன் அது காளத்தி மலை என்றும், அங்குள்ள கடவுளுக்குக் 'குடுமித்தேவர்' என்ற பெயர் உண்டு என்றும் கூறுகிறான். உடனே திண்ண னார். - - 'ஆவது ஏன்? இதனைக் கண்டு இங்கு அணைதொறும்

  • . . . என்மேல் பாரம்

போவதொன்று உளது போலும்’ (கண், புரா 97). 156

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/156&oldid=852516" இலிருந்து மீள்விக்கப்பட்டது