பக்கம்:மணிவாசகர்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிரே காட்சி தந்த ஒரு துறவியிடம் ஈடுபட்டுவிட்டார் என்றால் அந்த ஈடுபாட்டின் ஆழத்தை என் என்பது? இதனையே முழுமாற்றம் (Metamorphosis) என்று கூறு கிறோம். ஈடுபாடு ஏற்பட்டதன் காரணமாக அத்துறவியை நெருங்கிச் சென்று வழிபட்டார். அந்த வினாடியிலிருந்து திருவாதவூரர் என்ற ஒருவர், பாண்டிப் பேரரசின் அமைச் சர் என்ற ஒருவர் இல்லை. அந்த வினாடியிலிருந்து அத் துறவியின் பால் ஈடுபட்ட ஓர் அடியார், பக்தர், யான், எனது என்ற அகங்கார, மமகாரம் அற்ற ஓர் அடியார்தாம் அங்குள்ளார். இதனிடையில் குதிரை வாங்கக் கொண்டு சென்ற பணம் செலவாகிவிட்டது. அப்பணத்தை யார் செலவிட்டனர் என்பது பற்றிய ஆராய்ச்சி பயனற்றது. திருவாதவூரர் பழைய நிலையில் இருந்திருப்பின் தாம் யார்: இப்பணம் யாருடையது என்ற வினாக்கட்கு விடை கிடைத் திருக்கும். ஆனால், துறவியிடம் ஈடுபாடு கொண்டு, யான் எனது என்பவற்றைக் கடந்து அன்பராகி விட்ட ஒருவர் பாண்டியன், குதிரை, பணம் என்பவற்றை வேறுபடுத்திக் காண்கின்ற அளவு சென்றிருக்க முடியாது. நம்போன்றவர் கட்கு இயல்பாகத் தோன்றும் இந்த வேறுபாடு, அவரு டைய மனத்துள் தோன்றி இருப்பின் அவர் மாணிக்க வாசகராக ஆகி இருக்கவும் முடியாது. எனவே, பணத்தைச் செலவு செய்தது யார் என்ற வினாவை எழுப்புவதும், அதற்குரிய பொறுப்பு யாருடையது என்றாராய்வதும் அத் துணைச் சிறப்புடையதன்று. வேறு யார் அப்பணத்தைச் செலவிட்ட பொறுப்பை மேற்கொண்டாலும் திருவாத ஆரருக்கு அப்பொறுப்பை ஏற்றுவது பயனுடையதன்று. திருவாதவூரருடன் திருப்பெருந்துறைவரை உடன் வந்தவர்கள் பாண்டியனிடம் சென்று நடந்தவற்றைக் கூறிய துடன் பணம் கரைந்துவிட்டதையும் கூறினர். இந்நிலை யில் நடைபெற்றது யாது என்பதைக் கூறுவதில் திருவாத ஆரர் வரலாறு கூறும் மூவரும் மாறுபடுகின்றனர். பெரும் 158

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/159&oldid=852522" இலிருந்து மீள்விக்கப்பட்டது