பக்கம்:மணிவாசகர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னும் அவர் ஆண்டவனாலே ஆட்கொள்ளப்பட்டத னாலும், திருவாசகச் செந்தேனை ஊட்டி நம்மனோரை ஆட்கொண்டதனாலும் ஆளுடைய அடிகள் என்று பெரியார் கூறக் கேட்டோம். இங்ங்ணம் திருவாதவூரடிகளென்றும், தென்னவன் பிரமராயரென்றும், மாணிக்க வாசகரென்றும், ஆளுடைய அடிகளென்றும் அடிகளின் பெயர்களைக் கேட் டோமே யன்றி அழுதடி யடைந்த அன்பர் என ஒரு பெயர் கேட்டோமில்லையே? இப்பெயரிட்டார் யாரா யிருத்தல் கூடும்? ஆண்டவன் ஆலவாயின்கண் அடியார்களுக்கு அருளும் பொருட்டு அருட்டிரு மேனிகொண்டு ஆடியருளிய அறு பத்து நான்கு பெருவிளையாடல்களையுந் திருவிளையாடல் என்னும் பெயரிய நூலாகப் பத்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய பரஞ்சோதி முனிவரென்பார் அந்நூலின் பாயிரத்துள் சமயகுரவர் நால்வருக்குத் துதி கூறுமுறையில் : "எழுதரு மறைகள் தேறா விறைவனை எல்லிற் கங்குற் பொழுதறு காலத் தென்றும் பூசனை விடாது செய்து தொழுதகை தலைமே லேறத் துளும்புகண் ணிருள் மூழ்கி அழுதடி யடைந்த வன்பன டியவர்க் கடிமை செய்வாம்' னை மணிவாசகரைத் துதிப்பாராயினர். இனி, இவர் ஆளுடைய பிள்ளையாரை வழுத்து முகத்தால், 'கடியவிழ் கடுக்கை வேணித் தாதைபோற் கனற்கண் “. . . . மீனக் கொடியனை வேவ நோக்கிக் குறையிரக் தனையான் கற்பிற் பிடியன நடையாள் வேண்டப் பின்னுயி ரளித்துக் காத்த முடியணி மாடக் காழி முனிவனை வணக்கஞ் செய்வாம்' என அவர் வரலாற்றிற் சிறந்ததொரு பகுதியாகிய பாண்டி யன் மீது வெப்புநோயை விடுத்துப்பின் நீக்கியருளிய செய்தி யையும், ஆளுடைய அரசுகளைப் போற்று முகத்தால் 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/16&oldid=852524" இலிருந்து மீள்விக்கப்பட்டது