பக்கம்:மணிவாசகர்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று அகமனம் கூறுகிறது. எனவேதான், இறைவனிடம் சென்று முறையிட்டபோது அவன் யாது ரவினானோ அதனை அப்படியே செய்து முடித்துவிட்டார். இறைவன் ஆண்டான்தான் அடிமை என்ற முடிபை ஏற்றுக் கொண்ட பிறகு ஆண்டான் ஏவலை ஏற்காமல் மறுப்பதும் அதனை அறிவின் துணை கொண்டு ஆய முற்படுவதும் ஆண்டான் அடிமைத் திறத்திற்கு முரண்பாடாகுமன்றோ! வாழ்க்கையில் இம்மாதிரி நடை பெறுவதை இன்றுங் காண்கிறோம். நம்முடைய நம்பிகைக்குப் பாத்திரமான வர்கள் கூறுவதை, யார் எதிர்த்துக் கூறினும், நாம் ஏற்றுக் கொள்கிறோம் அன்றோ? சாதாரணமான நம் போன்ற மனிதர்களிடங்கூட நாம் இத்தனை நம்பிக்கை வைக்கிறோம் என்றால் அனைவரினும் மேம்பட்டவன் என்று திருவாதவூர ரால் கண்டு கொள்ளப்பட்ட ஒருவன் ஏவலில் நம்பிக்கை வைத்துப் பாண்டியனுக்குக் குதிரைகள் வரும் என்று அவர் ஒலை அனுப்பியதில் தவறு என்னை? இதன் பின்னர் நடந்தவை நாம் அறிந்த ஒன்றேயாகும்’ திருவாதவூரர் குதிரைகள் வரும் என்று கூறிய நாளில் குதிரை கள் வரவில்லை. மன்னன் திருவாதவூரரைத் தண்டிக்கும்படி ஏவினான். தானே தேடிக் கொணர்ந்த அமைச்சராயினும் அவருடைய பண்புடைமைமாட்டு அவன் பெரு நம்பிக்கை கொண்டிருந்தான் எனினும் தனி மனிதனாகிய தன்னுடைய விருப்பு வெறுப்புக்களை அரச நீதியில் புகுமாறு அரசன் விடவில்லை. அரசுக்குரிய குதிரைகள் வரவில்லை; அதற் குப் பொறுப்பேற்றவர் தண்டனைக்குள்ளாவது நியாயமான தேயாகும். எனவே, இச் செயலில் பாண்டியன் மேல் தவறு கூறல் இயலாது. பாண்டியன் தண்டனையை மாணிக்கவாசகர் பெற்ற மையால்தான் இன்று நமக்குத் திருவாசகம் கிடைத்துள் ளது. உலகில் தோன்றும் பெரியோர்கள் தாம் பிறந்ததால் ஏற்படும் பயனை உலகுக்கு வழங்க வேண்டுமாயின் அவர்கள் 162

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/162&oldid=852530" இலிருந்து மீள்விக்கப்பட்டது