பக்கம்:மணிவாசகர்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரளவு துன்பப்பட்டேதான் தீரல் வேண்டும் போலும்: இராமன் காடு சென்றதால்தான் இராவணன் வீழ்ச்சி ஏற். பட்டது. அவன் காடு செல்லக் காரணமாயிருந்த கைகேயி கருணையற்ற மனமும் ஒரு பெரும் பயனை விளைவிக்கக் காரணமாயிருந்தது. மாணிக்கவாசகர் தண்டனை பெற்றார் என்றால் அதனால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. நான், எனது என்ற இரண்டையும் அறுத்தெறிந்தவர்கட்கு. உடலுக்கு ஏற்படும் துன்பம் உண்மையில் துன்பஞ் செய்வ தில்லை. அவர்கள் கொப்பரைத் தேங்காய் போன்றவர்கள். அவர்கள் உடல் படும் வாதனை அவர்களை ஒன்றுஞ் செய்வ தில்லை. இயேசு பெருமான் சிலுவையில் அறையப்பட்ட தும், திருநாவுக்கரசர் நீற்றறையில் இடப் பெற்றதும் இத்தகைய நிகழ்ச்சிகளேயாகும். இவற்றால் அவர்கள் அவதி: யுறுவதில்லை. மணிவாசகர், நாவுக்கரசர், இயேசு போன் றவர்கட்கு உடல் துன்பம் உண்டாக்கப் பெற்றமையின் முறையே திருவாசகம், தேவாரம் உலகம் ஏற்றுக்கொண்ட ஒரு சமயம் என்பவை கிடைத்தன. மணிவாசகர் பாண்டியன் தந்த தண்டனையால் துன்புறவில்லை என்பதைப் பரஞ். சோதியார் மிக அழகாகக் கூறுகிறார். செங்கனல் சிதறநோக்கும் சினங்கெழு காவலாளர் மங்குலின் இருண்ட கண்டர் தொண்டரை மறுக்கஞ் செய்வார்’ நடந்தவர் செம்பொற் பாத நகைமலர் புணையாப் பற்றிக் கடந்தனர் துன்ப வேலை புலர்ந்தது கங்குல் வேளை' (நரி. பரி. படலம் 13-14) திருவாதவூரரைப் பாண்டியன் துன்பஞ்செய்த மறுநாள் வேதநாயகன் கணக்கற்ற புரவிகளைக் கொண்டு வந்தான். பாண்டியன் எல்லையற்ற மகிழ்ச்சியுற்றான். பரிமாச்சேவ கனாக வந்த அண்ணல் பாண்டியனிடம் குதிரைகளைக் கொடுப்பதற்கு அடையாளமாக அவற்றின் கயிறுகளை மாறி 163

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/163&oldid=852532" இலிருந்து மீள்விக்கப்பட்டது