பக்கம்:மணிவாசகர்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

னான். குதிரை வாணிகத்தின் நுட்பம் ஒன்றைப் பாண்டிய .ணுக்குக் கூறினான் குதிரைகள் தலைவன். அரசே! இந்தக் குதிரை வாணிபத்தில் ஒரு நுணுக்கம் உண்டு. கவனமாகக் கேட்பாயாக, கயிறு மாறிக் கொண்ட இந்த வினாடிக்குப் பிறகு இக்குதிரைகளின் சொந்தக்காரன் நீ யாகிவிடுவாய், அந்தக்கணத்திலிருந்து இக்குதிரைகட்கு வரும் நலம், தீங்கு, ஆகிய அனைத்திற்கும் நீதான் பொறுப்பே தவிர, நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம். நாளை இக் குதிரைகள் என்ன வானாலும் நாங்கள் பொறுப்பில்லை என்று கூறிவிட்டுக் குதிரைச் சேவகர் தலைவன் தான்கொணர்ந்த குதிரைகளின் இலக்கணங்களையும் எடுத்துரைத்தான். இக்குதிரைகள், சமயம் வந்தால் மதிலைத் தாண்டும், மிக இடுக்கான சாக் கடையுள்ளும் நுழைந்து செல்லும். திறந்த வெளியெலாம் ஒடும், பசி வந்து விட்டால் குதிரைகள் தின்காதவற்றையும் தின்னும் என்றான். . - "இன்னவாம் பரிகள் என்பால் இன்றுt கயிறு மாறி நின்னவாக் கொள்ளும் நீரால் கின்னவாம் பரியே நாளை என்னவாய் இருந்த வேனும் எனக்கும் உன்தனக்கும் கொண்டு மன்னவா! கருமம் இல்லை பரிவிலை வழக்குஈது என்றார்' காயும்வேல் மன்னர் ஒரிக் கடும்பரி சமயம் வந்தால் ஞாயிலும் தாண்டிச் செல்லும் காட்டமும் நுழையாச் சால வாயிலும் நுழையும் கண்ட வெளியெலாம் வழியாச் செல்லும் தீயவெம் பசிவந்து உற்றால் தின்னாத எனினும் - - தின்னும்' (நரி. பரி. பட. 82-86) மணிவாசகரிடம் பொன்னைத்தந்து குதிரை வாங்கப் பாண்டியன் அனுப்பினான்; குதிரைகள் வந்தன; அவனும் பெற்றுக்கொண்டான். குதிரையின் கயிற்றைப் பாண்டியன் கையில் பெற்றுக்கொண்ட அந்த வினாடியே குதிரைப் 164

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/164&oldid=852534" இலிருந்து மீள்விக்கப்பட்டது