பக்கம்:மணிவாசகர்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று கூறிய நாளில் குதிரைகள் வராமற்போகவே மணி வாசகர் தண்டிக்கப்படுகிறார். இரண்டாம் முறையாகக் குதிரைகள் நரிகளாயின. பின்னர் தண்டிக்கப்படுகிறார். இரண்டாவது தண்டனையின்போது இறைவன் வையை யைப் பெருக்கினான் எனில் முதல் தண்டனையின்போது யாது செய்தான்? - - - - முதல் தண்டனை பலநாள் நீடித்தும் இறைவன் அதனை மாற்ற வழி செய்யாதது ஏன்? என்ற வினாவைக் கேட்டுவிட்டால் கிடைக்கும் விடையில் ஒர் அற்புதத்தைக் காண்டல் கூடும். அரசாங்கப் பணத்தை எடுத்துச் சென்று பொறுப்புள்ள ஒருவர் அது எதற்காக எடுத்துச் செல்லப்பட் டதோ அதனைச் செய்யாமல் வேறு எது செய்தாலும் அது தவறுதான். கோயில் கட்டினார், அடியார்கட்குச் செலவு செய்தார் என்றெல்லாம் கூறுவது பொருளற்ற வாதம் கண்ணை மூடிக்கொண்டு சமயம் என்ற போர்வையில் புகுந்துகொண்டு இதற்கு விடைகூற முற்படுவது தவறு. போலிச் சமயவாதிகள் இதற்குக் கூறும் சமாதானத்தை இறைவன்கூட ஏற்கவில்லை என்பதையே வரலாறு கூறு கிறது. . நீதி என்ற ஒன்றை வகுத்த இறைவன் அந்த நீதியிலி ருந்து யார் வழுவினாலும் அவர்களை ஒறுக்காமல் விடுவ தில்லை. இயற்கையின் சட்டத்தை இறைவனும் மீறுபவ னல்லன். திருவாதவூரர் பொதுப் பணத்தை எடுத்தார் என்பது குற்றம். ஆனால், அதனைத் தம்முடைய நலத்துக் குச் செலவு செய்தாரா இல்லையா என்பது வேறு வினா! எனவே, முதல் குற்றத்திற்குரிய தண்டனையை அவர் அனுப விக்கின்ற வரை இறைவன் வாளா இருந்துவிட்டான். ஒருவர் செய்த குற்றத்தின் அளவு நோக்கித் தண்டனை வழங்கப்படுகிறது. திருவாதவூரர் செய்த குற்றத்தின் அளவு தோக்கிச் சில நாட்கள் அவர் தண்டனை அடைவதை இறைவன் வாளா விட்டுவிட்டான். ஆனால், பாண்டியன் குதிரைகளைப் பெற்ற பின்னர் மறுபடியும் திருவாதவூரர் J56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/166&oldid=852537" இலிருந்து மீள்விக்கப்பட்டது