பக்கம்:மணிவாசகர்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று காட்டும் அகச் சான்றால் அறிகிறோம். திருநாவுக் கரசர் பெருமானுத்கு நஞ்சுகலந்த பாற்சோறு தரப்பெற். றதும், கல்லோடு சேர்த்துக் கட்டப் பெற்று அவர் கடலில் எறியப்பட்டதும் கீழ்வரும் அவருடைய வாக்காலேயே அறியமுடிகிறது. வஞ்சனைப் பாற்சோறு ஆக்கி வழக்கிலா அமணர் தந்த நஞ்சு அமுது ஆக்கிவைத்தார் நனிபள்ளி அடிகளாரே' (அப்பர் தே. 14-70-5) "கல்லி னோடுஎனைப் பூட்டி அமண்கையர் ஒல்லி நீர்புக நூக்களின் வாக்கினால் கெல்லு நீள்வயல் நீலக் குடி அரன் நல்ல காமம் நவிற்றிஉய்ந் தேனன்றே" (அப்பர் தே. 5-72-7) தேவாரம் பாடிய பெரியார்கள் மூவரைப் போன்று மணிவாசகப் பெருமானும் தம் வாணாளில் நடந்த சிறந்த செயல்களைத் தம் பாடல்களிற் கூறியுள்ளார். இப் பெருமக்கள் அத்தகைய செயல்களைக் கூறுவதன் நோக்கம் என்ன எனில், தம் சிறப்பைக் குறிக்க வன்று; தம்மையும் ஒரு பொருளாக்கி இறைவன் தமக்காகச் செய்தவற்றைக் குறிப்பதற்கே யாம். இதனால் இறப்ப உயர்ந்த இறைவனு டைய எளிவந்த தன்மையை வியந்து கூறியவாராயிற்று. அடிகள் வாழ்வில், குதிரையின் இருப்பை அறியாமல் அவை'வந்து சேரும் என்று பாண்டியனுக்குத் தாம் ஒலை அனுப்பியதைப் பெரிதும் நினைந்து வருந்துகிறார். ஒலை அனுப்பியபடி குதிரைகள் வரவில்லை; அவை வந்து சேருமா, சேராவா என்பதை அறியும் வாய்ப்பும் அவருக்கு இல்லை. தம் அடிமைத் திறத்தின் காரணமாக இறைவன் கூறியவற்றைத் தலைமேற்கொண்டு குதிரை வரும் என எழுதியது சரியே என்று அகமணம் கூறவும், குதிரைகள் உள்ளனவா, அவை வருமா என்பதைப் பகுத்தறிவின் - Il - 169.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/169&oldid=852543" இலிருந்து மீள்விக்கப்பட்டது