பக்கம்:மணிவாசகர்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பொய்யர் பெறும்பேறு அத்தனையும் பெறுதற்குரியேன் (56) 'வஞ்சனேன் பொய்கலந்தது அல்லது இல்லை’ (77) "விச்சுக்கேடு பொய்க்கு ஆகாதென்று எனஈங்கு வைத் தாய் (85) “யானும் பொய்யும் புறமே போந்தோமே" (89) புறமே போந்தோம் பொய்யும் யானும்: (90) 'யானே பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்' (94) 'பொய் இலங்கு எனைப் புகுதவிட்டு' (81) பொருத்தம் இன்மையேன் பொய்மை உண்மையேன் (97) "பொறுப்பர் அன்றோ பெரியோர், சிறுகாய்கள்தம் - பொய்யினையே’ (110) "பொய்யவனேனைப் பொருளென ஆண்டு' (111) 'பொய்யனேன் அகம்கெகப் புகுந்து' (396) 'பொய்யெலாம் விடத் திருவருள் தந்து' (567) பிறப்பிவை கினையாது பொய்களே புகன்று' (570) "நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பல செய்து (569) என்றெல்லாம் கூறல் நோக்கற்குரியது. 'தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிகாணு வார்' (குறள் 433) என்ற குறள் அடிப்படையில் இப்பெருமக்கள் வாழ்க்கை அமைந்திருப்பதைக் காணலாம். இப் பெரியார்களைப்பற்றி மரபு வழி பேசுபவர்கள் இவர்கள் பிறப்பிலேயே இந்நிலை அடைந்து விட்டவர்கள் என்றும், இந்த மானிட வாழ்க்கையில் தவறே இழைக்காத வர்கள் என்றும் கூறுவதுண்டு. அவ்வாறு கூறும் கூட்டத் தாரைச் சேர்ந்தவனல்லன் யான். அப்படித் தவறே செய்யா மல் பிறப்பிலேயே இவர்கள் பெரியவர்களாக இருந்திருப் பின் இவர்களுடைய வாழ்க்கை நம் போன்றோருக்கு எவ் விதத்திலும் துணை புரியாது. நம்மைப் போல் பிறந்து: 17. I

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/171&oldid=852548" இலிருந்து மீள்விக்கப்பட்டது