பக்கம்:மணிவாசகர்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறுதியாக நம்பினார் என்பதை வலியுறுத்துகின்றன. அழுது அடி அடைய முடியும் என்று நிரூபித்துக் காட்டிய பெருமை மணிவாசகப் பெருமானுக்கே உண்டு. இக் கருத்தை என் தந்தையார் பெருஞ் சொல் விளக்கனார்’ அ. மு. சரவண முதலியாரவர்கள்தாம் எழுதிய அழுது அடி அடைந்த அன்பர்’ என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார்கள் குற்றத்தை நினைந்து வருந்தினால் உய்கதி கிட்டும் என் பதை நிரூபித்துக் காட்டியமையினால்தான் போலும் போப் போன்ற மேனாட்டாரையும் திருவாசகம் கவர்ந் திழுத்தது. இப் பெருமக்கள் போன்றவர்கள் மனித சமுதாயத்திற்கு நம்பிக்கை என்ற ஒன்றைத் தந்து போயினர். எத்துணைக் கடைகெட்ட வாழ்வு வாழ்பவர்களும் என்றாவது ஒருநாள் தம் பிழையை நினைந்து உண்மையிலேயே வருந்துவார்க ளாயின் நிச்சயமாக அவர்கட்கும் உய்கதி உண்டு. வாழ்க் கையில் என்றுமே நம்பிக்கையை இழக்க வேண்டிய தேவை இல்லை என்பதை நமக்குத் தம் வாழ்வின் மூலம் எடுத்துக் காட்டிய பெருமை அடிகளாருக்கு உண்டு. ஜான் பன்யனின் “uurt šifæssfisi un š@sog" (Pi.grim's Progress) arsirp நூலில் இறுதியாக நம்பிக்கை என்ற வாள்பற்றிப் பேசப் படுவதை இங்கு நினைவுகூர வேண்டும். - பெருமானின் வாழ்வு திசைமாறி இந்நிலையை அடை தற்குக் காரணமாக அமைந்தது ஒரு சொல்லாகும். உலகில் ஒருவர் வார்த்தையை நம்பி ஒருவர் வாழ்வதும் நடப்பதும் உண்டு. ஆனால் அது நம்போன்ற மனிதருடைய வார்த்தை யையேயாகும். பாண்டியன் போன்றவர்கள் இறைவன் கூறினான் என்பதை அறிய வாய்ப்பின்மையின் குதிரைகள் வரும்' என்பதை மணிவாசகரின் வார்த்தை என்றே கருதி னார்கள். இவ்வாறு தாமாகக் கூற அடிகளார்க்கு உரிமை இல்லை யல்லவா? குதிரை வாங்கும் பணம் போய்விட்டமை யின் 'குதிரை வரும்' என அவர் எழுதுவது சரியன்றுதானே! இறைவன் கூறினான் என்பதை நாமும் அடிகளும் அறி வோம். ஆனால் மன்னனைப் பொறுத்தவரை வேறு 1 or so

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/173&oldid=852552" இலிருந்து மீள்விக்கப்பட்டது