பக்கம்:மணிவாசகர்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதனை அடைத்துப் போனதும் ஆம். இவற்றை ஒவ்வொன் நாகக் காணலாம். முதலாவது இறைவன் குதிரைச் சேவகனாக வந்தமை யாகும். "கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார் குற்றங்கள் நீக்கி............ (194) "கதிரை மறைத்தன்ன சோதி கழுக்கடை கைப்பிடித்து 'குதிரையின் மேல்வந்து கூடிடு மேல் குடிகேடு கண்டீர்’ (525) தெரிவர கின்றுருக்கிப் பரிமேற் கொண்ட சேவகனார் (524) பரிமேற் கொண்ட பாண்டிய னார்’ (526) "மாவேறி வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் (6.23) அரியோடு பிரமற்கு அளவறி யாதவன் பரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும் (கீர்த்தி.116-7) "ஞாலம்மிகப் பரிமேற் கொண்டு கமை ஆண்டான் (334) :பாண்டியன் தனக்குப் பரிமா விற்று ஈண்டு கனகம் இசையப் பெறாஅது - ஆண்டான் எங்கோன்' (கீர்த்தி 38, 39) இவ்வடிகள் இறைவன் குதிரைச் சேவகனாக வந்த மையை அறிவுறுத்தப் போதுமானவையாகும். இறுதி யாகக் காட்டப்பெற்ற அடி ஆழ்ந்து சிந்தித்தற்குரியது. குதிரைச் சேவகனாக வந்த பெருமான் குதிரைகளைப் பாண்டியனிடம் தந்து அவற்றுக்குரிய பொன்னைப் பெறவில்லையாம். ஏன்? இக்குதிரைகள் திருவாதவூரர் முன்னரே பெற்றுச் சென்ற பொன்னுக்கு ஈடாகப் பாண்டியன் பெற்றவை என்பதையும் அடிகள் குறிப்பால் வெளியிடுதல் அறியத்தக்கது. - 175

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/175&oldid=852557" இலிருந்து மீள்விக்கப்பட்டது