பக்கம்:மணிவாசகர்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதனை அடுத்துக் காணவேண்டியது நரிகள் குதிரை களாக வந்த வரலாறும் மீட்டும் அவை நரிகளான வரலாறு மாகும். இவ்விரண்டு நிகழ்ச்சிகட்கும் வேண்டுமான அளவு அகச்சான்றுகள் திருவாசகத்தில் உள்ளன. ‘கரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்' (கீர்த்தி 35) 'கரிகள் எல்லாம் பெருங்குதிரை ஆக்கியவாறு அன்றே கின் பேரருளே’ (544) கரியைக் குதிரை பரியாக்கி' (647) என்பன போன்ற அடிகள் அகச் சான்றாய் அமைகின்றன. இனி அடுத்திருப்பது வையைப் பெருக்கும், பிட்டுக்கு மண் சுமந்தது மாகும். அவை, "ஆங்கது தன்னில் அடியவட் காகப் r பாங்காய் மண்சுமந்து அருளிய பாங்கும்’ (2-47) 'மண்பால் மதுரையில் பிட்டமுது செய்தருளி தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட (290) "பிட்டு நேர்பட மண்சுமந்த பெருந்துறைப் பெரும் பித்தனே' (467) 'கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண் சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு புண் சுமந்த பொன்மேனி............... # (182) என்பன போன்ற அடிகளாற் பாடப்பெற்றுள்ளன. இதில் ஒரு வியப்பு என்னையெனில் தம்மைப் பொய்யன் என்று பற்பல விடங்களிற் பேசிக்கொள்ளும் பெருமான் தம்முடைய வாழ்க்கையில் நடைபெற்றவையும் அப் பொய்யிலிருந்து விளைந்தவையுமான அற்புதங்களைப் போகிற போக்கிற் பேசுகிறாரே தவிர அதுபற்றிப் பெரிதுபடுத்தவே இல்லை. இக் குறிப்புக்களும் இறைவனுடைய பரம கருணையைக் காட்டவும், அவன் செய்கின்ற பேருதவிகட்குத் தம் தகுதி இன்மையை அறிவிக்கவும், இப் பாடல்களில் இடம் பெற் றுள்ளனவே தவிர இவை செயற்கருஞ் செயல் என்ற கருத்தில் 176

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/176&oldid=852559" இலிருந்து மீள்விக்கப்பட்டது