பக்கம்:மணிவாசகர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனி, அடிகள் வரலாற்றைக் கூறுமுறையில் மற்றைய இருவரோடுஞ் சிற்சில பகுதிகளில் முரண்படுகின்றனரே எனின், அங்ங்னமே அவ்விருவரும் பலவிடங்களில் ஒருவரின் ஒருவர் மாறுபாடுகின்றனர். அடிகள் வரலாறு இம் மூவர் களாலும் பெரும்பாலும் திருவாசகத்திற் காணப்படும் ஆதரவுகளைக் கொண்டும் சிறுபான்மை செவிவழியாக வந்த செய்திகளைக் கொண்டும் ஆக்கப்பட்டதாகலின் இம் முரண் நேருதல் இயல்பே. ஆனால், ஒவ்வொருவர் மாறு பாட்டிற்கும் திருவாசகத்திற் சான்றுகள் உள. அவற்றைக் கொண்டு இதுதான் எனத் துணிந்து இம்மூவரும் வரை யறுத்துக் கூறினார்களில்லை. இதனை நோக்க நமது அடிகள் வரலாறு தெய்வச் சேக்கிழார் பெருமான் திரு வாயாற் கூறப்படாது போனது சைவவுலகம் செய்ததவக் குறைவு போலும். இனி, இம்மூவராலும் கூறப்படாதனவும் திருவாசகச் சான்றுகள் உள்ளனவுமாய பகுதிகளும் உள. அவற்றை நுணுகி ஆராய்ந்து காண்பது எம்மனோர்க் கியலாத தொன்றாயினும் என் புல்லறிவிற்குப் புலனாகிய தொன்றை இங்குக் குறிப்பதற்கு முன் ஒன்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாராய்ச்சி நமது நாட்டின்கண் தமிழ்மொழி தலை சிறந்து நின்ற ஒரு காலத்தில் அம்மொழியை ஐயந் திரிபறக் கற்று வல்ல புலவர் பெருமக்கள் தலையில் சிவானு பூதிப் பெருஞ்செல்வர்' என்னுஞ் சுமையை ஏற்றி அவரியற் றிய நூல்களைப் பிள்ளையார்சுழி முதல் முற்றிற்று வரையில் வரிவரியாக எழுத்தெழுத்தாக நம்ப வேண்டுமென் னும் கொள்கையை மேற்கொண்டு அறிவிற்கு ஒர் எல்லை கட்டிக்கொண்டு ஆராய்ச்சி என்னுஞ் சொல்லைக் கேட்டவள விலே தலை நடுக்கு மக்கள் சிலர்க்குக் கைப்பாக இருக்கும். ஆனால், இக்காலம் ஆராய்ச்சிக்கு மதிப்புத் தருகின்றது எனக் கருதி அதற்குத் தகுதி இல்லாத பலர் அத்துறையில் இறங்கி முறை தவறிச் செல்கின்றார் எனக் கூறாமலும் இருக்க இயலவில்லை. ஆராய்ச்சி வல்லுநருக்குப் பொது வாக இருக்க வேண்டிய குணங்கள் பல. அவை இயற்கை 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/18&oldid=852566" இலிருந்து மீள்விக்கப்பட்டது