பக்கம்:மணிவாசகர்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செயலைச் செய்தவர்கள் பட்டியல் ஒன்று தருகிறாரே! அப் பட்டியலிற்கூட மணிவாசகர் பெயர் கூறப்படவில்லை என்பதை நோக்க மணிவாசகர் தேவார மூவர்க்கும் பிற்பட் டவர் என்ற முடியே வலியுறுகின்றது. அப்படியானால் மணிவாசகர் ஏன் மூவர் முதலிகள் பற் றிப் பாடவில்லை என்பதும் ஆய்தற்குரியது. ஏனைய மூவர் போல மணிவாசகர் பிறருடைய வரலாற்றில் ஈடுபட்டுப் பாடியதாகவே அறியக்கூடவில்லை. கண்ணப்பர் ஒருவர் வரலாறு தவிரப் பிற அடியார்கள் யார் பற்றியும் அவர் குறிக்கவில்லை. மேலும் திருக்கோவையாரில் 20க்கு மேற் பட்ட புராணச் செய்திகள் இடம் பெறுகின்றன. ஆகம நூற் கருத்துக்கள் பெரிதும் இடம் பெற்றுள்ளன. (பன்னிரு திரு முறை வரலாறு -2. திரு. க. வெள்ளை வாரணனார் பக் 271, 2) என்றாலும் இக்கருத்து மேலும் ஆராய்வதற்குரிய யது. இதில் ஏதேனும் உண்மை புலப்பட்டால் மணிவாசகர் மூவருக்கும் முற்பட்டவர் என்பது பெறப்படலாம். மூவர் காலத்துக்கும் முற்பட்டவர் என்று கூறுவதில் பல இடர்ப்பாடுகள் உண்டு. ஞானசம்பந்தர் காலத்திய வழி பாட்டு முறைக்கும், மணிவாசகர் காலத்திய வழிபாட்டு முறைக்கும் வேறுபாடு நிரம்ப உண்டு. இயற்கையில் இறை வனைக் காண்கிற சூழ்நிலை ஞானசம்பந்தர், அப்பர் காலத்தே இருந்து வந்தது. இது சுந்தரர் காலம் வரை ஒரளவு நீடித்தது எனலாம். சம்பிரதாயங்கள் கிரியைகள் என்பன ஞானசம்பந்தர் காலத்தில் அத்துணைச் சிறப்புப் பெற்றிருக்கவில்லை. புறச்சமயத்திலிருந்து சைவ சமயத் திற்கு மீண்ட திருநாவுக்கரசருக்கு, எவ்வித பிராயசித்தமும் இன்றித் திருநீற்றை அளித்துக் கோயிலுக்குப் போகுமாறு ஏவிவிட்டார் அவர்தம் தமக்கையார். மூவர் காலத்தில் ஆகமங்கள் மணிவாசகர் காலத்துப் பெற்ற சிறப்பைப் பெறவில்லை. மணி வாசகர் ஆகமங்கள் பற்றிப் பன்முறை பேசுகிறார். 180

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/180&oldid=852568" இலிருந்து மீள்விக்கப்பட்டது