பக்கம்:மணிவாசகர்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசம்பந்தர் காலத்தில் இறைவிக்குத் திருக்கோயில் களில் தனி இடம் இருந்ததாகத் தெரியவில்லை. அப்படியே இருந்திருப்பினும் இறைவியைத் தனியே விவரித்துப் பாடும் மரபு இருந்ததாகத் தெரியவில்லை, உமையொரு பாகனாக இறைவனைப் பாடும் மரபும், கங்கையைத் தாங்கியவன் என்று பாடும் மரபும் உண்டே தவிர இறைவியைத் தனியே பாடும் இயல்பு இல்லை. சிவன் கோயிலில் உமைக்குத் தனிப் பகுதியை முதன் முதலில் ஏற்படுத்தியவன் முதலாம் குலோத் துங்கனே என்றும் கூறுவர் அறிஞர். அன்றியும் இராச ராசனுடைய தேவாரப் பதியக் கல் வெட்டில் மூவர் பெயரு. டைய தேவாரம் பாடுவார் காணப்படுகின்றனரே யன்றித் திருவாதவூரன் என்ற பெயரையோ, மாணிக்கவாசகன் என்ற பெயரையோ உடைய பதியம் பாடுவார் யாரையும் காண முடியவில்லை. அவனுக்கு முந்திய கல்வெட்டுக்களி' லும் இப்பெயர் காணப்படவில்லை. இவை இரண்டு செய்தி களும் அடிகள் பிற்காலத்தவர் என்ற கட்சிக்கு வலுத்தரு கின்றன என்பது காரைக்குடி திரு சா. கணேசன் அவர் களுடைய கருத்தாகும். இதன் எதிராக மணிவாசகர் இறைவியின் குழற். சிறப்பு, அணிச் சிறப்பு, இடையழகு என்பவைபற்றியும் 47 இடங்களில் பாடுதல் அவர் காலத்தாற் பிற்பட்டவர் என்பதை அறிவிக்கிறது. அடிகள் 'ஏகன் அநேகன்' போன்ற மொழிகளால் இறைவனைப் பாடுவதும், சமணத்தை விட்டுவிட்டு பெளத் தத்தைச் சாடுவதும் இவர் களப்பிரர் (சமணர்) இடை யீட்டுக்கு மிகவும் பிற்பட்டவர் என்பதைக் காட்டுகின்றன. “மிண்டிய மாயா வாதமென்னும் சண்டமாருதம்' என்ற அடியால் குறிப்பிடப்படும் 'மாயா வாதம் மறைமலையடி கள் கருத்துப்படி ஆதிசங்கரருக்கு முற்பட்டது என்று கூறுதல் பொருந்துமாறில்லை. மிண்டிய என்ற அடை மொழியும், சண்டமாருதம்' என்ற அடையும் கவனிக்கத் 181

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/181&oldid=852570" இலிருந்து மீள்விக்கப்பட்டது