பக்கம்:மணிவாசகர்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

னாலேயே திருவாசகம் காட்டும் விஞ்ஞான உலகைக் காட்ட முற்படுகிறேன். ஓயாது இளைஞர்களுடன் பழகும் காரணத்தாலும் ஓயாமல் ஊர் சுற்றிக்கொண்டு வருவதாலும் இன்றைய இளைஞர் சமுதாயம் என்ன நினைக்கிறது; எதில் ஈடுபடு கிறது; ஏன் அவதிப்படுகிறது என்பவற்றை அறியும் வாய்ப் பைப் பெற்றுள்ளேன். மணிவாசகர் மற்றொரு சந்தர்ப்பத் தில் கூறியதுபோல இன்றைய சமுதாயம் இனி என்னே உய்யுமாறு' என்று எண்ணிக் கலங்கி நிற்கிறது. இதனைக் காணுகின்ற நான் திருவாசகம் நமக்கு விடை தருகிறது. என்று நினைக்கிறேன். . திருப்பெருந்துறையில் பாண்டி மன்னனின் அமைச்சரா யிருந்த திருவாதவூரர் ஒரு பெரிய முழு மாற்றத்தைப் பெற்று (Metamorphosis) மாணிக்கவாசகராக மாறி விடு கின்றார். அவ்வாறு மாறுவதற்கு முன்பு திருவாதவூரராக இருந்த நிலையில் பல கலைகளையும் கற்றுத் தேர்ந்த அவர், சிறந்த அறிவு படைத்த அறிவுவாதியாக இருந்தபொழுது கண்ட சில புதுமைகள் அவருடைய திருவாசகப் பாடல்களி லும் இடம் பெறுகின்றன. 15-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு மேலை நாட்டார் கண்ட சில வான இயல் புதுமைகள் 9-ஆம் நூற்றாண்டில் தோன்றிய திருவாசகத்தில் இடம் பெறுகின்றன. இன்று. அறிவுலகம் என்றும் விஞ்ஞானம் படைத்த உலகம் என்றும் நம்மால் புகழப்படும்.மேனாட்டார், உலகம் தட்டையானது என்றும் சூரியன் தான் பூமியைச் சுற்றிவருகிறது என்றும் கூறிக்கொண்டிருந்த காலத்தில் கலிலியோவும் கோப்பர்: aகசும் முறையே தம் தொலைநோக்கியாலும், கணித அறிவாலும் இவ்வுலகம் உருண்டை வடிவானது என்றும், இவை அனைத்தும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்றுங் கூறினர். அவ்வாறு அவர்கள் கூறினமைக்குக் கிடைத்த பரிசு யாது என்பதை நாம் அறிவோம். 188

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/188&oldid=852579" இலிருந்து மீள்விக்கப்பட்டது