பக்கம்:மணிவாசகர்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூர்தல் அறத்தைப் பேச வரவில்லையாதலால் அதில் வரிசைக் கிரமம் பேசவேண்டிய தேவை அவருக்கில்லை. ஆனால், டார்வின் இக் கூர்தல் முறையைப் பற்றி 1859ஆம் ஆண்டில் கூறுமுன்பே மணிவாசகர் இக் கருத்தை அறிந்து கூறிச் செல்கிறார். திரு அண்டப்பகுதி என்பது திருவாச கத்தில் உள்ள மூன்றாவது அகவல். இப் பாடலுக்கு விளக்கம் தர வந்த இடைக்காலப் பெரியோர்கள் சிவனது துல சூக்குமத்தை வியந்தது’ என்று கூறினார்கள். இப் பாடலில் முதல் ஐந்து வரிகள் மட்டும் கீழே தரப்படுகின்றன. அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருங் தன்மை வளப்பெரும் காட்சி ஒன்றனுக்கு ஒன்று கின்றன.ழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இல்நுழை கதிரின் துன்அணுப் புரையச் சிறிய ஆகப் பெரியோன்............ 3. இதன் பொருள் : "அண்டமாகிய பேருலகின் பகுதி களில் உருண்டை வடிவமான பெருக்கம் அளத்தற் கரிய தன்மையுடையனவாய், வளமிக்க காட்சியுடையனவாய், ஒன்றை யொன்று அடுத்து நிற்கும் நிலையினை அளவிட்டுக் கூறப் புகுந்தால் நூறு கோடியின் மேம்பட்டனவாகும். இத் துணைப் பெரிய அண்டம் முழுவதும், வீட்டினுள் இருளில் நுழையும் சூரிய கிரணங்களில் காணப்பெறும் சிறிய அணுக் கள் போல உள்ளது என்று கூறும்படி அவ்வளவு பெரியோ னாக விரிந்தும் பரந்தும் உள் ளான் இறைவன்.” இப்பாடலில் காணப்பெறும் சில விஞ்ஞான உண்மை களை மட்டும் எடுத்துக்கொண்டு அவை தற்காலப் விஞ்ஞா னப் புதுமைகளுடன் எவ்வளவு ஒத்துள்ளன எனக் காண் போம். 'அண்டப்பகுதி என்று பெருமான் கூறியதை இற்றை நாளில் "Universe என்று கூறுகிறோம். அதில் உள்ள 'உண்டைப் பிறக்கம் என்பதனை 'Galaxies' என்று கூறுகிறோம். நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன: 196

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/190&oldid=852585" இலிருந்து மீள்விக்கப்பட்டது