பக்கம்:மணிவாசகர்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யில் உள்ள உண்டைகளின் பெருக்கம் நூறு கோடியின் மேம். பட்டன என்பதை இற்றைநாள் வானநூலார் ஒப்புக்கொள் வது மட்டுமன்று; அவை எண்ணி மாளாதவை என்றே கூறுகிறார்கள். அடிகளும் நூற்றொரு கோடியின் மேற்பட என்ற சொல்லால் அவை எண்ணி மாளாதன என்ற கருத் தையே வலியுறுத்துகிறார். - மனத்திற்கு மயக்கந்தரும் இக் கணக்கு ஒருபுறம் நிற்க, அடிகள் பாடலின் நான்காவது அடியின் கடைசிச் சொல் நம் வியப்பை இன்னும் மிகைப்படுத்துகிறது. அச்சொல் "விரிந்தன என்ற ஆழமான பொருளையுடைய சொல். ஏனைய நாடுகளோடு மிகுதியும் தொடர்புடைய தமிழர்கள் ஆற்றைநாளில் வானநூற் புலமையுடையவர்களாக இருந் ருப்பர் என்றே நினையவேண்டி உளது. 'உண்டை' என்ற இந்த ஒரு சொல்லால், கோப்பர்நிகஸ்'(Copernicus) உலகம் உருண்டை வடிவமானது என்று கூறுமுன்பே இத் தமிழர் அண்டத்தில் உலவும் உலகங்கள் அனைத்தும் உண்டை வடிவம் உடையன என்று கூறியதைக் கண்டோம். அதனினும் பார்க்க வியப்பானதாகும். அவ்வுண்டைகள் விரிந்தன என்று கூறியது இற்றை நாள் வான நூலாரும் அண்டம் விரிந்துகொண்டே செல்கிறதென்ற முடிவுக்கு வந்துள்ளனர். 'அண்டத்தில் அரைவிட்டம் ஒளி அலைகளைவிட வேக மாகப் பெருகிக் கொண்டே செல்லுகிறது; இன்னும் வேக மாகப் பெருக ஏதுவும் உண்டு. இப்பொழுதுக்ட ஓரிடத்தில் இருந்து புறப்பட்ட ஒர் ஒளி அலை அண்டத்தைச் சுற்றிவர இயலாதபடி அதன் பரிதி விட்டம் மிகுந்துகொண்டே செல்கிறது.' இங்குப் பேசப் பெற்ற விரிவின் வேகத்தைக் கணக்கிட்டு ஒருவாறு தருகிறார் ஐன்ஸ்டீன். 1. It is probable that the radius of space is already increasing faster than the velocity of light, and this rate of expansion will grow greater. Already it would be impossible for a ray of light to go all round the world, for the circumfrence of the world is growing faster than light could overtake it... J. W. N. Sullivan, in Limitations of Science. Page. 21. - 192

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/192&oldid=852589" இலிருந்து மீள்விக்கப்பட்டது