பக்கம்:மணிவாசகர்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகப் பேரறிவாளியான ஐன்ஸ்டின் கூறும் மொழிகளு டன் இதனை முடிப்போம். “My religion consists of a humble admiration of the illimitable superior spirit who reveals. Himself in the slight details we are able to perceive with our frail and feeble minds. That deeply emotional conviction of the presence of a Superior reasoning power which is revealed in the incomprehensible universe, forms my idea of God”. The cosmic religious experience is the strongest and noblest mainspring of scientific research. “He to whom this mystical experience is a Stranger, who can no longer wonder and stand rapt. in awe, is as good as dead. To know that what is. impenetrable to us really exists, manifesting itself as the highest wisdom and the most radiant beauty which our dull faculties can comprehend only in their most primitive forms this knowledge, this feeling is, at the centre of true religiousness,” இதுகாறுங் கூறியவை மணிவாசகரின் விஞ்ஞான அறிவுக்கு எடுத்துக் காட்டுகளாகும். ஆனால், ஒரிடத்திலா வது தாம் கூற வந்த விஞ்ஞான மெய்ம்மைகளை விளக் கிச் செல்லவில்லை. எவ்வாறு அந்த மெய்ம்மைகளை அவர் கண்டார் என்பதையும் கூறவில்லையே! ஏன் என்றால், அவர் விஞ்ஞானம் போதிக்கவந்த ஆசிரியரன்று என்ற விடையைத்தான் தரவேண்டும். தாம் கண்ட மெய்ம்மைகள் தாம் கூறவந்த பெருங் கருத்துக்கு அரண் செய்வதாக இருத்தலின் போகிற போக்கில் கூறிவிட்டுச் செல்கின்றார். அஃதல்லாமல் இவ் விஞ்ஞானப் புதுமை களை; நமக்கு எடுத்துக் கூறுவது அவருடைய கருத்தன்று. 197

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/197&oldid=852598" இலிருந்து மீள்விக்கப்பட்டது