பக்கம்:மணிவாசகர்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனவேதான் அவைபற்றிய விளக்கம் யாண்டும் பேசப் படவில்லை. இனி இவருடைய புலமை நயத்தைக் காட்டுகிற திரு வாசகம், திருக்கோவையார் என்பவற்றைப்பற்றிப் பேசு முன் பலருடைய மனத்தில் உள்ள ஒரு வினாவுக்கு விடை கூறிவிட்டே மேலே செல்லவேண்டும். திருவாசகமும் திருக்கோவையாரும் ஒருவரே பாடி இருத்தல் கூடுமா? என்பதே அந்த ஐயம். இதற்கு விடை கானத் திறனாய் வாளர் பகுத்துள்ள இருவகைப் பாடல்களைப்பற்றி அறிய வேண்டும். முதலாவது 'பொள்ளெனத் தோன்றும் *osog' (Dionysian Poetry) grair-rag -wift & செய்யும் கவிதை' (Appolinian Poetry) அல்லது மரபுக் கவிதை (Conventional Poetry) என்று கூறப்பெறும். இதில் முதல்வகைப் பாடலாகிய பொள்ளெனத் தோன்றும் கவிதை, அனுபவம் தோன் றியவுடன், அப்படியே அதற்கு வடிவு கொடுப்பதாகும். அனுபவத்திற்கு அப்படியே அதற்கு வடிவு கொடுக்கின்ற காரணத்தாலும் அதுபற்றிச்சிந்தித்துப் பார்த்து அழகு செய்யப்படாத காரணத்தாலும் அது ஒரு தனிப்பட்ட தொகுப்பாகவே இலங்குகிறது. ஏனைய கவி தைகளைப் போலக் கற்பனை, சொல்லாட்சி முதலிய பிற நயங்களை இதில் காணமுற்படுவது சரியன்று. இவ்வாறு கூறுவதால் இத்தகைய பாடல்களில் கற்பனை முதலிய தயங்கள் இரா என்பது கருத்தன்று. இருப்பினும் அவற் றுக்காக இக் கவிதைகள் சிறப்படைவதில்லை. இவை அனுபவத்தைச் சொற்கள் மூலமே தாங்கி வருகின்றன. ஆதலால், அச் சொற்களை ஒருவன் படித்தவுடன் அந்த அனுபவம் அப்படியே அவனுள் இறங்குகிறது. இத்தகைய கவிதைகள் தாமே எழுதப்பெறுகின்றன என்றும் இக் கவிஞர் ஆட்பட்டவர் (lnspired) அதாவது கோட்பட்டவர்கள் (Possessed) என்றும் மேனாட்டுத் திற ன்ாய்வாளர் கூறுவர் பாடி முடிக்கின்றவரை இக் கவிஞர் கள் சுய உணர்வுடன் இருப்பதில்லை. ஏதோ ஒன்று 198

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/198&oldid=852600" இலிருந்து மீள்விக்கப்பட்டது