பக்கம்:மணிவாசகர்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்முள் புகுந்து (Divine madness) தம்மை ஆட்கொண்டு கவிதை எழுதுமாறு செய்கிறது என்றும் கூறுகின்றனர் இக் கவிஞர்கள். இக்கருத்து மேனாட்டார் மட்டுங் கண்டு கூறியதன்று என்பதை நம்மாழ்வார் பாடல்களும் அறி விக்கின்றன. தம்முடைய பாடல்கள் தாம் பாடியன அல்ல என்றும் இறைவன் தம் மூலமாகத் தன்னைத் தானே பாடிக் கொண்டான் என்றும் பாடுகிறார் நம்மாழ்வார். ‘என்னால் தன்னை இன்தமிழ்பாடிய ஈசனை "..............திருந்து நல் இன்கனி நேர்பட யான் சொலும் நீர்மை இலாமையால் ஏர்வு இலாத என்னைத் தன்னாக்கி, என்னால் தன்னை பார் பரவு இன்கவிபாடும் பரமரே (7,9-1,5) இல் வரிகளுள் இறைவன் தம்மைப் பாடுவித்தான்' என்று ஏவல் வினையாற் கூறாமல், தானே பாடினான் என்றே ஆழ்வார் கூறுவது ஆய்தற்குரியது. . ஏனைய வகைப் பாடலில் சொல், சொல் குறிக்கும் பொருள்,அதனை நன்கு விளக்க உதவும் அணிகள், கற்பனை ஆகிய அனைத்தும் சேர்ந்து கவிஞனின் அனுபவத்தை நமக்குத் தருகின்றன. இவ்வகைப் பாடல்களைக் கவிஞன் ஆய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்த சொற்களின் மூலம் நமக்கு வழங்குகிறான். எந்தச் சொல்லைப் பெய்தால் தான் நினைந்த முறையில் அனுபவத்தைக் கற்பார் மன்த் தில் புகுத்த முடியும் என்றுகூட ஆராய்கிறான். அல்லது எந்தச் சொல்லைப் பெய்தால் தான் கருதிய சிந்தனை அதில் வெளிப்படுகிறது என்று ஆய்ந்தே கவிஞன் இவ் விரண்டாவது வகைக் கவிதைகளில் சொற்களைப் பயன் படுத்துகிறான். ஆதலால், இவை பெரிதும் மரபு பற்றியே வெளிப்படுகின்றன. கற்பவர்களும் அந்த மரபை அறிந்த வர்கள் ஆதலிற் கவிஞனுடைய சொல்லுக்கு உண்டான மரபுப் பொருள் அனைத்தையும் பெறுகின்றனர். ஆனால், பொள்ளெனத் தோன்றும் கவிதையில் இதற்கு வாய்ப்பு 199

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/199&oldid=852602" இலிருந்து மீள்விக்கப்பட்டது