பக்கம்:மணிவாசகர்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லை. அனுபவத்தைப் பெற்றவனுடைய இலக்கிய அறிவு, கல்விப் பெருக்கம் என்பவற்றிற்கேற்பவே அவன் பயன்படுத்தும் சொற்கள் அமையும். அவனுடைய கல்விப் பெருக்கத்திற்கேற்ப அதிகமான பொருளாழம் உள்ள சொற்களை அறிந்திருத்தல் கூடும். அதிகமான சொற்களை அறிந்திருந்தால் தன் அனுபவத்தைச் செம் மையாக அறிவிக்கக்கூடிய துல்லியமான சொற்களைப் பயன்படுத்திக் கவிதை அமைப்பான். இவ்வாறு கூறுவ தால் கவிஞன் தேவையான சொற்களை ஆராய்ந்து பெறுகின்றான் போலும் என்று நினைய வேண்டா. அவன் தேவைக் கேற்பச் சொற்கள் தாமே வந்து கை கொடுக்கும். குழந்தை, வஞ்சகம் என்பது ஒரு சிறிதும் இன்றி, உள்ளத்தில் தோன்றியதை அப்படியே வெளியிடுதல் போலப் பொள்ளெனத் தோன்றும் கவிதையிலும் ஒளிவு மறைவின்றி உள்ளத்துணர்ச்சி வெளிப்படுகிறது. உதா ரணமாக ஒன்றைக் காணலாம். இறைவன், தம் தகுதியறி யாது மிக உயர்ந்த பதத்தைக் கொடுத்து விட்டதாக மணிவாசகர் கருதுகிறார். - - "என்னால் அறியாப் பதம் தந்தாய் (642) 'காயிலாகிய குலத்தினுங் கடைப்படும் என்னைநன் னெறிகாட்டித் தாயிலாகிய இன்னருள் புரிந்தளன்...'(43) 'காட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே - . காயினுக்குத் தவிசிட்டு காயினேற்கே'(32) "கானின்று வற்றியும் புற்றெழுந்தும் காண்பரிய தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு' (178) "நாட்டார் கைசெய்ய நாம் மேலை வீடெய்த ஆட்டான் கொண்டு ஆண்டவா........ (180) இவ்வாறு இறைவன் கருணையை நினையும் போதெல்லாம் அவன் மாட்டு நன்றியுணர்வு மிகுகின்றது. 200

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/200&oldid=852607" இலிருந்து மீள்விக்கப்பட்டது