பக்கம்:மணிவாசகர்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராம, இலக்குவர்கள் பிராட்டியுடன் கானகம் புகு கின்றனர்; மாலை நேரம். கவிஞன் இக் காட்சியை மனத் திரையில் கொணர்ந்து பார்த்து அதனை நன்கு அனுபவித்து விட்டு அந்த அனுபவ உணர்வுக்கு வடிவு கொடுக்க முனை கின்றான். ஒவியத்து எழுத ஒண்ணா அந்த உருவ'த்தைக் கவிஞன் கற்பனையில் காண்கிறான்; முன்னே நடக்கின்ற வர்களின் வடிவழகில் ஈடுபட வாய்ப்பில்லை, எனவே நிற அழகில் மட்டுமே ஈடுபடுகிறான். பின் அழகில், வண்ணத் தில் (நிறத்தில்) ஈடுபடுகிறான்: கவிதை பிறக்கிறது. ஆனால், கவிதைச் சொற்கள் தாமாகவே வெளிவருகின்றன’ நாம் அந்தச் சொற்களில் ஈடுபடுவது போலவே கவிஞனும் ஈடுபடுகிறான் போலும்! ஈடுபட்டுப் பாடிக் கொண்டே வருகையில் திடீரென்று அவன் மனத்தில் ஒர் ஐயம் தோன்றி விடுகிறது. இராமபிரானின் வண்ணத்தில் ஈடுபட்ட கவிஞன், மனித மனத்துக்குரிய இயல்பான முறையில், அந்த வண்ணத்துக்கு உவமைகள் கூறுகிறான். உவமை களாகச் சிலவற்றைக் கூறிக்கொண்டு வரும் பொழுதே, அந்த உவமைகள் மூலம்கூடத் தான் அனுபவிக்கும் அந்தப் பேரழகைக் கூற முடியாத நிலை ஏற்படுவதை அறிகிறான் கவிஞன். இந்த உவமைகள், தான் அனுபவிக்கும் அனுபவத்தை வெளியிடுவதற்குப் பதிலாக அதன் அளவைக் குறைத்து மதிக்குமாறு செய்துவிட்டனவோ என்று அஞ்சுகிறான் கவிஞன். எனவே மேலும் அது பற்றிக் கூறுவதை நிறுத்திக் கொண்டு தன் ஏலாமையை அறிவித்து விடுகிறான். "வெய்யோன் ஒளி தன்மேனியில் விரிசோதியின் மறையப் பொய்யோ எனும் இடையாளொடும் இளையா னொடும் - போன்ான். மையோ! மரகதமோ! மறிகடலோ! மழை முகிலோ! ஐயோ! இவன்வடிவு என்பதோர் அழியா அழகு உடை - - - யான்" (கங்கைப்-1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/202&oldid=852611" இலிருந்து மீள்விக்கப்பட்டது