பக்கம்:மணிவாசகர்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோன்ற ஆகின்ற கால தாமதத்தைக் குறைக்க விரும்பிய கவிஞன் இரண்டு இடைவெளியை ஒன்றாகக் குறைத்து மூன்று சொற்களை இரண்டாக்கி மதி|முகம் என்று கூறினான். உவமத்தொகை என்ற பெயரில். இன்னும் இதில் தோன்றும் தாமதத்தைக் குறைக்க விரும்பியே இடைவெளியைப் போக்குவதுடன் எண்ண ஓட்டத்தை யும் மாற்றுகிறான். முதலில் மதியை நினைந்து பிறகு முகத்தை நி னை ப் ப த கு ப் பதிலாக முகத்தை நினைந்து மதியை நினைக்கும் முறையில் மாற்றிப் போடுவதால் அதிகப்படியான உணர்வை ஊட்டமுடியும் என்று கருதிய கவிஞன் முகமதி' என்று இடைவெளி யற்ற உருவகத்தை உண்டாக்கினான். இதனையே தொல் காப்பியம் பொருளே உவமம் செய்தனர் மொழியினும் மருளறு சிறப்பின் அஃது உவமமாகும் (உவம இயல்-9) என்று கூறிற்று. இதற்கு உருவகம் என்ற பெயர் தொல்காப் பியனார் காலத்தில் இன்றேனும் இதனால் விளையும் சிறப்பை உணர்ந்த தொல்காப்பியனார், மருள் அறு சிறப்பின் அஃது என்ற அடைமொழியால் இதன் தனித் தன்மையை விளக்கிச் செல்கிறார். எவ்வாறு இடைவெளி யைக் குறைப்பதால் அதிகமான உணர்ச்சியை ஊட்ட முடிகிறதோ, அதே போலப் பொள்ளெனத் தோன்றும் பாடலில உணர்ச்சியை விரைவாகவும் அதிகமாகவும் ஊட்ட முடிகிறது. ஒரு புலவனுடைய புலமை நயத்தை அறிதற்கு அவன் பெய்யும் உவமைகள் நல்ல சான்றுகளாகும். ஒரே பொரு ளுக்குப் பலர் உவமை கூறி இருப்பினும் கூறுவானுடைய விரிவான அனுபவத்திற் கேற்ப அது சிறந்து விளங்கக் காணலாம். ஒரே பொருளை இருவர் கண்டாலும் இருவரு டைய மனத்திலும் தோன்றும் எண்ணங்கள் வெவ்வேறான வையாய்த்தான் இருக்கும். உதாரணமாக ஒன்றைக் காண லாம்: கண்ணபிரானுடைய திருவாயை ஆண்டாள் நினைக் கின்றார். கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ?" 307

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/207&oldid=852621" இலிருந்து மீள்விக்கப்பட்டது