பக்கம்:மணிவாசகர்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மையிலங்குகற் கண்ணி பங்கனே! வந்தெ னைப்பணி கொண்ட பின்மழக் கையி லங்குபொற் கிண்ண மென்றலால் அரியை என்றுனைக் கருது கின்றிலேன்' (96} இறைவன் தம்மாட்டுக் கொண்ட அருள் காரணமாக அவரை அடிமை கொண்டான் ஆயினும், தம் அறியாமை காரணமாக அவனுடைய அருமைப்பாட்டையும் அவன் எவ்வளவு அரிய பொருள் என்பதனையும் நினைத்தும் பார்க்கவில்லை என்று கூற வருகிறார் பெருமான், ஆனால், இத்துணைக் கருத்தையும் விரித்துக் கூறாமல் மழக் கை யிலங்கு பொன் கிண்ணம் என்ற உவமையைத் தருவதன் மூலம் மாபெரும் உண்மைகளை அறிவித்து விடுகிறார். இறைவன் பொற்கிண்ணம் போல்வான். மாசு மறுவற்றது பொன்னாகலின் அவனுடைய தன்மைக்கு அது உவமை யாயிற்று. பொன் பயன்படுதற்காகக் கிண்ணத்தின் உருவம் பெற்றதுபோல இறைவன் அருள் புரிதற்காக மானுட வடிவு தாங்கி வந்தான். பொன், கிண்ண வடிவு பெற்றா லும் பெறாவிட்டாலும், பொன்னுக்கு எவ்விதப் பயனும் இல்லை. அதுபோல மானுட வடிவந் தாங்கி வந்ததால் இறைவன் அடையும் பயன் யாதொன்றும் இல்லை. பொற் கிண்ணத்தில் சோறு உண்பதால் உண்பார்க்கு மனமகிழ்ச் சியே தவிரக் கிண்ணத்திற்கு எவ்விதப் பயனும் இல்லை. அதுபோல மானுட வடிவு தாங்கித் திருவாதவூரரை ஆண்டு கொண்டமையின் பயன் பெற்றவர் வாதவூரரே தவிர இறைவன் அல்லன். இதே கருத்தைப் பின்னரும் பேசுகிறார். தந்தது உன் தன்னைக் கொண்டது என்தன்னைச் சங்கரா யார்கொலோ சதுரர்? அந்த மொன்றில்லா ஆனந்தம் பெற்றேன்யான் யாது நீ பெற்றது ஒன்று என்பால்? (395) என்ற திருவாசகத்தில். இறைவனைப் பொற்கிண்ணம் என்று கூறியதில் இத் துணைப் பொருளும் அடங்கும். இனித் தம்மை மழக் கை' அதாவது மிக இளங்குழவியின் கைகளுக்கு உவமை கூறு 210

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/211&oldid=852630" இலிருந்து மீள்விக்கப்பட்டது