பக்கம்:மணிவாசகர்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வதன் மூலம் பல கருத்துக்களைப் பெற வைக்கிறார். இளங் குழந்தை என்பதை விட மழ’ என்ற சொல்லில் இன்னும் அதிகமான இளமை வெளிப்படுகிறது. இளமையில் நிற வேற்றுமையாவது அறியக் கூடும். ஆனால், மழப்பருவம் என்பது நான்கு திங்கட்கும் குறைவான பருவம் என்ப தாகும். நான்கு திங்கட்கும் குறைவான பருவம் என்று கொண்டால் அப்பொழுது கையில் உள்ள பொற்கிண்ணத் தின் நிறத்திற்கூட ஈடுபடமுடியாத பருவமாகும். எனவே கையில் உள்ள பொற்கிண்ணத்தின் நிறம், மதிப்பு, சிறப்பு, வடிவம் ஆகிய ஒன்றையும் அறியாத சூழ்நிலை ஏற்படு: கிறது. அதைப் பொருளுக்கு ஏற்றிப் பார்க்கும்போது தம்மை ஆண்டுகொண்ட இறைவனின் வண்ணம், மதிப்பு, சிறப்பு, வடிவம் ஆகிய ஒன்றையும் தாம் அறியவில்லை என்ற கருத்தையும் அடிகள் பேசுகிறார். அம்மட்டோடு இல்லை. அதே போன்று அடிகளார் இறைவனின் பண்பு களையும் அவன் கருணையையும் அறியாதது மட்டுமன்று : அறிய முயலவு மில்லை என்ற ஆழ்ந்த பொருளும் இந்த உவமையில் காணக்கிடக்கின்றன. ஆழ்ந்த புலமையில் உவமை கூறப்படும் பொருள் கவிஞனுடைய ஆழமான சிந்த னையைப் பல விதத்திலும் எடுத்துக் காட்டுவதாய் அமை: கின்றது. இனி மற்றோர் உவமையைக் காணலாம். "இருதலைக் கொள்ளியின் உள்எறும்பு ஒத்து நினைப்பிரிந்த விரிதலை யேனை விடுதிகண்டாய்...' (113) இரண்டு பக்கமும் தீப் பிடித்தபொழுது நடுவே ஒர் எறும்பு அகப்பட்டுக் கொண்டதாக உள்ள உவமை மிகப் பழையது தான். 'இருதலைக் கொள்ளி எறும்பு எனப் பேசுதல் உண்டு. ஆனால் இந்த உவமையில் ஒரு சிறு குற்றம் உண்டு. இருதலைக் கொள்ளியின் இடையே அகப்பட்ட எறும்பு தப்பித்துக் கொள்ளும் வழி ஒன்றுண்டு. நெருப்பு நெருங்கி வர வர எறும்பு துடித்துக் கால்களின் பற்றை விட்டு 21. I

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/212&oldid=852632" இலிருந்து மீள்விக்கப்பட்டது