பக்கம்:மணிவாசகர்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்டால் கீழே வீழ்ந்து பிழைத்துக் கொள்ள வழி உண்டு. இந்தக் குற்றத்தை நீக்கி அந்தப் பழைய உவமையை அடிகள் கையாள்கிறார். உள்ளே துவாரமுடைய குச்சி, அதன் இரு பக்கத்திலும் நெருப்பு: எறும்பு துவாரத்தினுள் இருக்கிற தாம். எத்துணைத் துடித்தாலும் எறும்பு பிழைக்கும் வழியே இல்லை. இதைத்தான் இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு என்று குறிக்கிறார் அறிஞராகிய வாதவூரர். அனுபவிக்கின்ற துன்பம் இறுதிவரை விடாது நிற்றலைக் குறிக்க இதனைவிடச் சிறந்த உவமை கூறல் இயலாது. 'வெள்ளத்துள் காவற்றி யாங்குன் அருள் பெற்றுத் துன்பத்தினின்றும் விள்ளக்கிலேனை விடுதிகண்டாய் --(118) வெள்ளத்துள் கிடந்தும் நாக்கு வறண்டதுபோல் என்று இதற்கு உரை கூறியுள்ளனர். இவ்வாறு கூறினால் வெள்ளத் துள் இருந்து கொண்டு அதனைக் குடிக்காமல் இருக்கும் குற்றம் கிடப்பவனையே சாரும். அவ்வாறு பொருள் கொண்டால் அது அடுத்த அடியோடு நன்கு பொருந்துமாறு இல்லை. நின் அருளைப் பெற்றும் துன்பத்தினின்றும் விடு பட்டேனில்லை என்று முதலடியின் பிற்பகுதிக்கும் பொருள் கூறப் பெறுகிறது. இவ்வாறு கூறுவதால் இரண்டு தவறுகள் நேர்கின்றன. திருவருள் பெற்றும் துன்பத் தொலைந் திலேன்’ (தருமை ஆதீனப் பதிப்பு 118-ஆம் பாடல் குறிப் புரை) என்று கூறினால் அத் திருவருள் இத் துன்பத்தைப் போக்க முடியவில்லை என்றல்லவோ பொருளாகிறது. மேலும் பாடல் அருள் பெற்றும் துன்பத்தினின்றும் விள்ளக் கிலேன்' என்று இல்லை. உம்மை இல்லாமல் அருள் பெற்றுத் துன்பத்தினின்றும் விள்ளக்கிலேன்' என்றுதான் உளது. அதாவது அருளைப் பெற்று அதன் பயனாகத் துன்பத்தினின்றும் விடுபடவில்லை என்ற முறையில்தான் பாடல் அமைந்துள்ளது. அவ்வாறாயின் இந்த உவமைக்கு எவ்வாறு பொருள் காண்பது? நாவற்றி என்பது நீர் மேல் வாழும் நான்கு 212

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/213&oldid=852634" இலிருந்து மீள்விக்கப்பட்டது