பக்கம்:மணிவாசகர்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்டது என்று இருந்து விடலாம். ஆனால் அவை ஆளை அழித்துவிடாமல் அல்லது விழுங்கி விடாமல் கொஞ்சங் கொஞ்சமாக மென்று தின்னத் தொடங்குகின்றன. எனவே தான் தின்னத் தகாது என்ற அருமையான சொல்லால் பாரதி இதனைக் காட்டுகிறார். கவிதைகளின் பொருள் நேரிடையாக விளங்கிவிடும். பொழுது நாம் நின்று நிதானித்து ஏன் என்ற வினாவை எழுப்புவதில்லை. அவ்வாறு எழுப்பினால் மிக அழகிய பொருள் கிடைக்கும். 'பெருநீர் அறச்சிறுமீன் துவண்டாங்கு நினைப் பிரிந்த வெருகீர்மை யேனை விடுதிகண்டாய்'...(130) என்ற பாடலில் பெருநீர் என்றும் சிறுமீன் என்றும் அடிகள் அடை தந்து பேசுவது ஏன்? சிறுமீனுக்குச் சிறு அளவு நீர் போதுமே! அவ்வாறு இருக்க பெருநீர் அற்ற குளத்தில். சிறுமீன் வாழுவது போல என்று கூறுவதன் நோக்கம் என்ன? பெரிய மீனானால் பெரிய அளவு நீர் வேண்டும். சிறிய இந்த மீனுக்குக் கூடப் போதிய அளவு பெரு நீர் இருந்த குளத்தில் இல்லாமற் போனது விந்தைதான். இறைவன் திருவருள் பெருநீர் போல இருப்பினும் இந்தச் சிறுமீன் அதனைப் பயன்படுத்திக் கொள்வதில்லை. அதற்கு, வேண்டியது சிறிய அளவு நீர்தான். ஆனால் இப்பொழுது பெருநீர் வற்றிவிட்டது. எவ்வளவு வற்றியது முற்றிலும் வற்றிவிட்டால் சிறுமீனும் அழிந்து ஒழிந்துவிடும். ஆனால் சிறுமீன் சாவதற்குரிய அளவுநீர் வற்றவுமில்லை; அது வாழ்வதற்குரிய தேவையான தண்ணிரும் இல்லையாம். சாகவும் விடாமல் வாழவும் விடாமல் இருக்கும் அவல நிலைக்கு இது சிறந்த விளக்கமாகிறது. ، . இத் திருவாசகத்தைப் படித்துத் தானேர் யாதோ பாரதி யார் உன் வெள்ளக் கருணையிலே அன்னாய் இந்நாய் சிறு வேட்கை தவிராதோ என்று பாடுகிறார். இதே போல மற்றோர்.கவிதையிலும் உவமை மூலம் மிகச் சிறந்த கருத்தை விளக்குவதைத் காணலாம். . سسین شانس 216

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/217&oldid=852642" இலிருந்து மீள்விக்கப்பட்டது