பக்கம்:மணிவாசகர்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரைசேர் அடியார் களிசிறப்பக் காட்சி கொடுத்துன் அடியேன்பால் பிரைசேர் பாலின் நெய்போலப் பேசா திருந்தால் ஏசாரோ?” (380) பிரைசேர் பாவின் நெய்யை உவமையாக்குவதன் மூலம் தாம் பெற்றுள்ள அனுபவத்தையும் அதை அறியமுடியாத பிறருடைய அறியாமையையும் அற்புதமாக விளக்கியமை காண்டல் வேண்டும். ஏனைய கவிஞர்கள் கூறாத ஒர் உவமையை அடிகள் பல இடங்களிற் பேசுகிறார். நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில், வைப்பதுபோல’ என்பது பழமொழியாகப் பிற் காலத்தில் வழங்குவதை தாம் அறிவோம். இதனை அடிகள் பல இடங்களில் பயன்படுத்துகிறார். - 'காயினுக்குத் தவிசு இட்டு' —(32) 'காய்மேல் தவிசிட்டு' —(234.) 'நான் யார் அடி அணைவான் ஒரு நாய்க்குத் தவிசிட்டு இங்கு -(505) இம் மூன்று இடங்களில் நாய்க்கு ஆசனம் இடுதல் இரண்டு இடங்களிலும் நாயின்மேல் ஆசனம் இடுதல் ஒரிடத்திலும் பேசப்படுகிறது. தகுதி இல்லாதவர்கட்குப் பொறுப்பைத் தந்து அதிகாரம் செய்யுமாறு செய்தல் நாய்மேல் தவிசு (ஆசனம்) இடுதல் போலவும், தகுதி அத்றவர்களை உயர்ந்த இடத்தில் இருக்குமாறு செய்தல் நாய்க்குத் தவிசு இடுதலாகவும் கொள்ளலாம். அடிகள் அமைச்சராக இருந் தமையின் பெற்ற அனுபவத்தாலேயே இந்த உவமைகள் வந்துள்ளன என்று நினைப்பதில் தவறு இல்லை. பொறுப்பு வாய்ந்த பதவிகளைத் தகுதி அறியாமல் சுமத்தியும், தகுதியற்றவர்களை அளவு மீறி மரியாதை செய்தும் வாழ வேண்டிய சூழ்நிலை, அவர் வகித்த பெரும் பதவி காரணமாகச் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டி 218

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/219&oldid=852647" இலிருந்து மீள்விக்கப்பட்டது