பக்கம்:மணிவாசகர்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருக்கலாம். அதனால் மனம் புழுங்கிய அடிகளாருக்கு இந்த உவமை அடிக்கடி நினைவில் வந்திருக்க வேண்டும். ஆகவே தான் மூன்று இடங்களில் இதே உவமையைப் பேசியுள்ளார். நாய்க்குத் தவிசு இடுவதால், நாய்க்கு இல்லாத பெருமை தரப்படுகிறது. நாய்மேல் தவிசு இடுவதால் தவிசின் மதிப் புக் குறைக்கப்படுகிறது. கவிதைக்குரிய கற்பனை முதலியவற்றைப் பக்திப் பாட லாகிய திருவாசகத்தில் காண முற்படுவது சரியன்று. ஆனா லும் அற்புதமான ஒரு முற்றுருவகம் செய்யப்படுவதைக் காணலாம். திரு அண்டப்பகுதியில் திருப்பெருந்துறை இறைவன் மழை பொழியும் மேகமாக உருவகம் செய்யப் பெறுகிறான். 66வது அடியிலிருந்து 95 அடிவரை ஒரே உருவகம் கொண்டு செல்லப்படுகிறது. ஆனந்தக் கடலாகிய இறைவன் கரிய மேகம் போல் திருப்பெருந்துறை என்னும் மலையில் தவழ்ந்து மின்னி, ஐம்புலன்கள் என்னும் பாம்புகள் பயந்து ஒடவும், துயரமா கிய கோடை ஒழியவும் எம் பிறவிமேற் கொண்ட கோபத் தால் அதைப் போக்கவும் இடித்து, இனிய அருள் என்னும் மழைத்துளிகளைப் பெய்து, துன்பமாகிய குளம் நிறைத லால் அதனை மாற்றி, ஆறு பிற சமயங்கள் என்று கூறப் பெறும் கானல் நீரை நம்பிவரும் மான்கணம் அச் சமயங் களின் மூலம் அமைதி பெற முடியாததுபோலப் பேய்த் தேரி னைக் கண்டு மருண்டு நிற்கையில், திருவருள் மழை இரு கரை பொருது ஓடி எங்களுடைய இருவினை என்ற மரங் களை வேருடன் பறித்துச் சென்று அருச்சனை என்ற வயலில் அன்பு என்ற வித்தை இட்டுத் தொண்டர் என்ற உழவர்கள் பயனடையும்படி பொழியும்” என்ற கருத்தில் கீழ்வரும் பகுதி அமைந்திருத்தலைக் காண்க. 'பரமா னங்தப் பழங்கடல் அதுவே அண்டத்து அரும்பெறல் மேகன் வாழ்க’ (அண்டம் 66-95) 219

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/220&oldid=852651" இலிருந்து மீள்விக்கப்பட்டது