பக்கம்:மணிவாசகர்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யைப்பற்றிக் கவலைப்படாமற்கூடக் காதல் உணர்ச்சி தோன்றி வளர்ந்து பெரிதாக ஆக முடியும் என்பதும் இத் தமிழர் கண்ட உண்மைகளாகும். அவ்வாறு தோன்றும் ஒரு ஒருதலைக் காமத்தைக் கைக்கிளை என்று பெயரிட்டு அது அத்துணைச் சிறப்புடையதன்று என்று கூறினாலும் அதன் இருப்பை, அல்லது சக்தியை மறப்பதற்கோ, மறுப் பதற்கோ இயலாது. இது பற்றிக் கூறவந்த தொல் காப்பியம், 'காமஞ் சாலா இளமையோள் வயின் ஏமஞ் சாலா இடும்பை எய்திச் சொல் எதிர் பெறான் சொல்லி இன்புறுதல் புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே' (தொல். அகம்-53) என்று பேசிச் செல்கிறது. எதிராளியினிடத்து எவ்வகை யான உணர்ச்சிப் பிரதிபலிப்பு இல்லாவிடினுங்கூட ஒருவன் இன்பம் அடைய முடியும் என்பதே இந் நூற்பாவால் போந்த திரண்ட கருத்தாகும். மேலும் இக் காதல் உணர்வு ஒருவகையான மன நிலையேயாகும் என்பதையும், 'மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன் செவ்வி தலைப்படு வார் (1289) என்ற குறளும்,

காமம் காமம் என்ப காமம்

அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக் கடுத்தலும் தணிதலும் இன்றே யானை குளகுமென்று ஆள்மதம் போலப் பாணியும் உடைத்தது காணுகர்ப் பெறினே' (குறுந்- 136) என்ற குறுந்தொகைப் பாடலும் இக்கருத்தை வலியுறுத்து 223

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/224&oldid=852659" இலிருந்து மீள்விக்கப்பட்டது