பக்கம்:மணிவாசகர்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வனவாகும். எனவே காமம் ஒரு மனநிலை யாகும் என்பது பெறப்படுகிறது. - மனித மனம் தன்னை மறந்து பூரணமாக அன்பு செலுத் தித் தன்னை அதன்பால் ஒப்படைக்கக் கூடிய ஒரு பொருளை நாடுவது முற்றிலும் இயற்கைதான் சாதாரண மாகக் காணும் பொழுது, எந்த ஓர் உயிரும் பாரிடம் மிக அதிகமான அன்பு செலுத்துகிறது. என்று பார்த்தால், அது தன் மேலேயே செலுத்திக் கொள்ளும் அன்புதான் மிக மிக அதிகமானதாகும். இந்த நிலையில் இருந்து விடுபட்டுப் பிறிதோர் உயிரிடம் சாதாரண அன்பைச் செலுத்தாமல், தன்மேல் தனக்குள்ள அன்பைவிட அதிகம் செலுத்தக் கூடு மேயானால் அதுவே காதல் எனப்பெறும். ஒவ்வொருவரும் அவரவருக்கேற்ற ஒரு பொருளிடத்து அல்லது உயிரினி டத்து அன்பு செய்வர். இதோ நாவுக்கரசர் பெருமான், என்னில் யாரும் எனக்கு இனி யாரிலை என்னிலும் இனி யான்ஒரு வள்உளன் என்னுளே உயிர்ப்பாய்ப் புறம்போந்து புக்கு என்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே' (5-ஆம் திரு-20-1) என்று பாடுகிறார். தன் மேல் பெருகும் அன்பை ஒரளவு மாற்றி, குறிப் பிட்ட ஒருவன் மேலோ, ஒருத்தி மேலோ செலுத்துல்து காதல் எனப்பெறும். அவ்வாறு ஒருத்தன், ஒருத்தி என்று குறிப்பிடாமல் அனைவரிடமும் செலுத்துவது அருள் எனப்பெறும். இவ்வாறு தன் மேல் மட்டும் வளரும் அன்பைப் பெருக்கி அகில உலகிலும் உள்ள நிலையியல் இயங்கியல் பொருள்கள் ஆகிய அனைத்திடத்தும் செலுத்து வதையே அருள் உடைமை என்கிறோம். தனியார் மாட்டுத் தோன்றும் பால் உணர்வு பால்வேறுபாட்டைக் கடக்கையில் அருள் (Subime Love) எனப்பெயர் பெறுகிறது. இக்கருத்தை நண்குனர்ந்த தமிழர் மிக ஆழ்த்ததும் பரந்ததுமான காதல் உணர்ச்சியை யார் வெளிப்படுத்தி 224

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/225&oldid=852660" இலிருந்து மீள்விக்கப்பட்டது