பக்கம்:மணிவாசகர்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனைத்துலகப் பொதுவான பக்திப் பாடலிலும் காதல் வரு வதில் தவறு இல்லை எனக் கண்டனர். நேரிடையாகத் தன் உணர்ச்சி வெளிப்பாட்டை அறிந்து கொண்டு தலைவி. பதிலுணர்ச்சி காட்ட முடியாத பொழுதும், கைக்கிளை என்ற பெயரில் அவள் மாட்டுக் கொண்ட காதலைப் பாட லாம் என்று இலக்கணம் வகுத்தனர். அதற்கு அடுத்த படி யாது? கண் காணாத கடவுளிடத்துத் தான் என்ற அகங் காரக் கலப்பில்லாத அன்பைச் செலுத்திப் பக்திப் பாடல் பாடினர். காதல், பக்தி என்ற இரண்டிலும் ஒரளவு அகங் காரம் மமகாரம் என்ற இரண்டும் குறைந்து தனி அன்பு, ஊற்றெடுத்தது. இந்தப் பொதுத் தன்மை காரணமாகவே பக்திப் பாடலில் அகப்பொருள் துறைகள் நுழைந்தன. இவை இரண்டின் தன்மையை அறிந்தவர்கள் இம்முயற் சியைத் தடை செய்யவில்லை. காதலிலும் அகங்காரம் கரைந்து தான்' என்ற பொருளை அவள் என்ற பொருளில் கரைக்க முயன்றனர்; பக்தியிலும் அவ்வாறே. எனவே மணிவாசகர் திருக்கோவையார் பாடியது முற்றி லும் பொருத்தமான செயலேயாகும். - அக உணர்வு பக்திப் பாடலில் இடம் பெறுவது முறை தான் என்றால், தேவார, திருவாசக, பிரபந்தம் போன்ற தன்னுணர்ச்சிப் பாடலில் அக உணர்வு வருவது முறை என்றுதான் பொருள். ஆனால் திருக்கோவையார் மரபு usi slo Lirl Lougyuh (Conventional Poetry) LTI surrejth. கோவையில் இரண்டடிகள் அக உணர்வுக் கருத்தை விளக்கு கின்றன. ஆனால் எஞ்சிய இரண்டடிகள் மணிவாசகரின் பக்தி நலத்தைக் காட்டுவனவாக அமைகின்றன. காதல் தோன்றுகையில் அது பற்றிப் படர்வதற்கு ஒரு கொழு கொம்பாக ஒருத்தனோ ஒருத்தியோ வேண்டும். அக் காதல் முருகி வளர்ந்த நிலையில் அது தோன்றக் காரண மாக இருந்த அந்த ஒருத்தனோ ஒருத்தியோ கடைசிவரை இருத்தல் வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. 228

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/229&oldid=852668" இலிருந்து மீள்விக்கப்பட்டது