பக்கம்:மணிவாசகர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனி, மற்றொன்றும் இங்கு எடுத்துக் காட்ட விரும்பு கிறேன். நமது அடிகள் தாம் பாடியருளிய திருவாகத்தன் தமது குறைபாடுகளைப் பலபடக் கூடியருளுவதைக் ●rअ கிறோம். அவற்றுள் ஒன்று தமது பொய்யைக் கடிந்து கொண்டது. - திருவாசகத்தின் முன்னுள்ள சிவபுராணம்' முதலிய நான்கு பகுதிகளிலும் மற்றுமுள்ள அறுநூற்று ஐம்பத்தெட் டுப் பாட்டுக்களிலும் சற்றேறக்குறைய முப்பத்து மூன்று இடங்களில், தமது பொய்யை நினைந்து வருந்துதல் காணப் படுகின்றது. அவற்றுள் தலைமை தாங்கி நிற்பது "விச்சுக் கேடுபொய்க் காகாதென்றிங் கெனை வைத்தாய்' என்பது இதன் பொருள்! பொய்க்கு-பொய் என்ற மரவர்க்கங்கள் உலகத்திலே தோன்றி அழியாமல் நிலை பெறுவதற்கு விச் சுக்கேடு ஆகாது-விதை முதலில்லாமற் போதல் நன்றன்று: என்று-என்று தேவரீர் திருவுளங்கொண்டு; இங்கு இந் நிலவுலகத்தில், எனை வைத்தாய்- அடியேனை வைத்திருக் கின்றீர்!, என்பது. இதிலிருந்து உலகத்திலே தோன்றி வளர்ந்து வருகின்ற பொய் அனைத்திற்கும் தாமே மூல காரணம் என அடிகள் கருதி வருந்தினார் என்பது புலப்படு கின்றதல்லவா? பொய் என்பது ஐந்து பெருந்தீவினைகளுள் ஒன்று என அறநூல்கள் விதித்தன. அது வீடுபேற்றுக்குத் தடையாயுள்ளதென்பதை போவோம் காலம்வந்தது காண் பொய்விட்டுடையான் கழல் புகவே' என அடிகள் கூறுவத னாலும், பொய் யுரைக்கா துன்னடிக்கே போதுகின்றேன். எனத் திருநாவுக்கரசர் கூறுவதனாலும் அறியலாம். மேற்காட்டியவற்றால், அடிகள் தமது வாழ்க்கையில் ஏதோ ஒரு சிறு பொய்க்கு ஆளாகி, "தினைத்துணையாங் குற்றம்வரினும் பனைத்துணையாக், கொள்வர் பழிநாணு வார்”என்ற திருக்குறளின்படி, அச்சிறு பொய்யை ம்லையள வாக் கருதியே அவ்வாறு வருந்தியிருக்க வேண்டுமென்று கருதினால் அது மிகையாகாது. х 33.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/23&oldid=852670" இலிருந்து மீள்விக்கப்பட்டது