பக்கம்:மணிவாசகர்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவையாரின் முதற் பாடலே அடிகளாரின் புலமை இயத்திற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். தமிழில் முதலில் தோன்றியது இன்று கூறத்தக்க பாண்டிக் கோவை 175 துறைகளை மட்டும் வகுத்துக் கொண்டு 326 பாடல்களைப் பெற்றுள்ளது. அடிகளார் 400 துறைகள் வகுத்துக் கொண் டார் என்றால் அவரது புலமைச் சிறப்பை அறிய இதுவும் ஒர் எடுத்துக் காட்டாகும். பிற்காலத்தில் எழுந்த விருத்தப் பாக்களில் உள்ளுறை இறைச்சிப் பொருள் தோன்றப் பாடிய பெருமை அடிகளுக்கே உரியதாகும். பதினேழு பாடல்களில் உள்ளுறைகள் அமைந்துள்ளன. - மரபுபற்றிப் பாடப் பெறுவதேனும் கோவைப் பாடல் களில் முதலிரண்டு அடிகள் கவிஞன் மனத்தில் மேலோங்கி நிற்கும் எண்ணத்தை வெளியிடும் கருவியாய் அமைகின்றன. "ஓங்கும் ஒருவிடம் உண்டு அம்பலத்தும்பர் உய்ய அன்று தாங்கும் ஒருவன் தடவரை வாய்த் தழங்கும் அருவி' (158) என்ற பாடலில் இறைவன் பிறர் பொருட்டாக நஞ்சையும் உண்ணும் பரம கருணையுடையவன் என்பதையும், தில்லையான் அருள்போன்று அலராய் விளைகின்றது (180) என்ற பாடலில் இறையருள் நம்மையும் அறியாமல் புகுந்து விரிகின்றது என்ற கருத்தையும் பிழைகொண்டு ஒருவிக் கெடாது அன்பு செய்யில் பிறவியென்னும் (65) என்ற பாடலில் உயிர்கள் பிழை எத்துணை செயினும் அன்பு செய்தால் அப் பிழையை மன்னிப்பவன் இறைவன் என்ற கருத்தையும், இதே கருத்தை, . தொழுவார், வினை வளம் நீறுஎழ நீறணி அம்பலவன் . - (118) 230

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/231&oldid=852673" இலிருந்து மீள்விக்கப்பட்டது