பக்கம்:மணிவாசகர்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கோவையாரின் முதற் பாடலில் அடிகளின் ஒப்பற்ற ஓசை நயமும், சொற்களைப் பொருளுக்காக மட்டுமின்றி அவற்றின் ஒசைச் செறிவை அறிந்து பயன்படுத்தும் சிறப் பும் விளங்குகின்றன. "திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர்தில்லை குருவளர் பூங்குமிழ் கொங்கு பைங்காந்தள் கொண் டோங்கு தெய்வ மருவளர் மாலையொர் வல்லியின் ஒல்கி அனநடை - - - வாய்ந்து உருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன்று ஒளிர் - - கின்றதே" இப்பாடலில் முதற்சீர் நான்கும் குறிலிணை இரண்டு பெற்ற சீர்கள். இனி முதலடியில் குறிலிணையில் தொடங்கி 2, 3, 4, 5 ஆகிய சீர்களில் முதலெழுத்து நெடிலாக வரு மாறு பாடப் பெற்றுள்ளது. இரண்டாம் அடியும் அவ் வாறே. மூன்றாம் அடி, நான்காம் அடிகள் இதன் எதிராக இரண்டாவது சீர்மட்டும் நெடிலில் தொடங்கி ஏனைய 3, 4, 5 ஆகிய சீர்கள் குறிலில் தொடங்குதலையும் காண லாம். முதலடியில் 6 நெடிலும், இரண்டாம் அடியில் 5 நெடிலும் பயன்படுத்திய அடிகளார் மூன்றாம் அடியில் 3 நெடிலும், நான்காம் அடியில் 3 நெடிலும் பயன்படுத்துதல் காணலாம். முதல் இரண்டு அடிகளிலும் எல்லா நெடில் களும் (முதலடியின் ஈற்றுச் சீர் தவிர சொற்களின் தொடக் கத்தில் வருதலும் மூன்று நான்காம் அடிகளில் உள்ள 6 நெடில்களில் 4 நெடில்கள் சீர்களின் இறுதியில் வருமாறு தொடுத்துள்ளார். - முதலிரண்டு அடிகள் தலைவியைக் கண்ட தலைவனது வியப்பையும், பின் இரண்டு அடிகள் தலைவியின் கூசிக் கூசி நடக்கும் நடையையும் குறிப்பால் உணர்த்தும் வகையில் ஒசைநயம் பெற்று விளங்கக் காணலாம். தலைவியைக் கண்ட பொழுது உடனே தோன்றிய அதிர்ச்சியை, முதற் சீர்களைக் குறிலிணையிற் றொடங்குவதன் மூலமும், 232

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/233&oldid=852677" இலிருந்து மீள்விக்கப்பட்டது