பக்கம்:மணிவாசகர்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்ம யாத்திரை மணிவாசகப் பெருமானுடைய வரலாறு, புலமை நயம் என்பவைபற்றிக் கண்டோம். இத் தலைப்பு சற்று விநோதமானது. யாருடைய ஆன்ம யாத்திரைபற்றிப் பேச இங்கு எடுத்துக் கொண்டது? மணிவாசகரின் திருவாசகம் எல்லா ஆன்மாக்களும் செய்ய வேண்டிய இன்றியமையா யாத்திரை பற்றிப் பேசுவதாகும். உலகிலுள்ள எல்லா ஆன்மாக்களும் செய்து கொண்டிருக்கின்ற, செய்ய வேண் டிய யாத்திரை பற்றிப் பேசுவதுதான் இந் நூலின் தனிச் சிறப்பாகும். ஆசாரிய ஹிருதயம்' என்ற நூல் நம்மாழ் வாரின் பாடல்களே அவருடைய ஆன்மீக வரலாறாகும் என்று பேசுகிறது. அதே போலத் திருவாசகமும் மணி வாசகருடைய ஆன்மீக வரலாறு என்று கூறுவதில் தவறில்லை. பல பிறவிகளில் பிறந்து, பட்டு உழன்று, துன்புற்று, அடைய வேண்டிய துன்பங்கள் அனைத்தை யும் ஒரே பிறவியில், அடைந்து உய்கதி பெற்றமையைத் தான் திருவாசகம் எடுத்துக் கூறுகிறது. முதற் பாட்டிலிருந்து இறுதிப் பாடல்வரை அப்பட்ட மான அனுபவத்தின் பிழிவாகும் இத்திருவாசகம் என்று கூறினால் தவறில்லை. ஆதலால்தான் ஏனைய பாடல் களிற் காணப்பெறும் தொடர்ச்சி, கற்பனை, வருணனை, சொல்லடுக்கு என்பவை இப்பாடல்களில் காணப்படு வதில்லை. இன்று, திருவாசகத்தை நாம் காணப்போகின்ற முறை ஓரளவு புதியதாகும். பழைய மரபு வழியை அடி யொற்றி இத்தகைய பாடல்களுக்குப் பொருள் காண முற் படுவதும், ஆராய்வதும் தவறாகும் என்ற கொள்கையை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. எந்த ஒன்றும் காலத்திற் கேற்பப் பயன்பட வில்லையானால் அதன் பயன் இல்லை யாய் முடியும். எனவே ஆராய்ச்சிக் கண்கொண்டு திரு வாசகத்திலிருந்து ஒரு சில முடிபுகளைக் காண முற்படு கின்றேன். இவை தவறாகவும் இருக்கலாம். ஆனால் தவறு. 234 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/235&oldid=852681" இலிருந்து மீள்விக்கப்பட்டது