பக்கம்:மணிவாசகர்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்படுமோ என்று அஞ்சி அதன் அருகே போகாமல் இருப்பதைவிட இது பயனுடையது என்று கருதுகிறேன். தவறு இருப்பின் அதனை மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கலாம். இவ்வாறு ஆராய முற்படுவதால் திருவாசகத் திணிடம் அன்புக் குறைவு என்று தவறான முடிபுக்கு யாரும் வர வேண்டா. இத்தகைய கண்ணோட்டத்தில் யான் கண்ட முடிபுகள் சிலவற்றை உங்கள் முன்னர் வைக்கத் துணிகின்றேன். முதலாவது தேவாரம் பாடிய மூவரினும் திருவாதவூரர் முற்றிலும் மாறுபட்டவர் என்று நினைக்க வேண்டியுளது. இந் நாட்டில் நிலவி வரும் பழைய கொள்கைகளின்படியே இம் முடிபுக்கு வந்துள்ளேன். திருஞான சம்பந்தர் போன்ற வர்கள் 'சீவன் முக்தர் எனப்படுவர். அப் பெருமானே, "துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி மறக்குமா றிலாதவென்னை மண்ணின் மேல், பிறக்குமாறு காட்டினாய்................. . ...’ (திருமுறை-2-98-2) என்று பாடுகிறார். ஞானசம்பந்தர் போன்றவர்கள் இப் பிறவியை எடுத்து ஒரு சிலவற்றைச் செய்துதான் வீடு அடைய வேண்டும் என்ற நியதி இல்லாதவர்கள். பிறப்பு, இறப்பு என்பவற்றைக் கடந்து நிற்கின்ற இவர்கள் ஏன் இவ்வுலகிடை தோன்றினர் என்றால் இறைவன் கட்ட ளையை நிறைவேற்றவேயாகும். தபால்காரர் தாம் கொண்டு வருகின்ற கடிதங்கள் நற்செய்தி கொணர்கின்றனவா அன்றா என்ற வேறுபாடு பாராட்டாமல் தம் கடமையை நிறைவேற்றிச் செல்வதுபோல இப் பெருமக்கள் எந்தச் சூழலிலும் சிக்காமல் இறைவன் கட்டளையை நிறைவேற். நிப் போவதற்காகவே இந்த உடம்பெடுத்தவர்கள். . இதன் எதிராக ஒரு சில பெருமக்கள் நம்போன்ற வாழ்க்கையுடையவர்கள். நம்போன்றது என்று இவர்கள் வாழ்க்கையைக் கூறினாலும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. 2.35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/236&oldid=852682" இலிருந்து மீள்விக்கப்பட்டது