பக்கம்:மணிவாசகர்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாகக் கூறாமல், ஏறட்டுக் கொண்டு கூறப்பட்டவை அல்ல. ஷேக்ஸ்பியரின் எட்டாவது ஹென்றி என்ற நாடகத்தில் வரும் தாமஸ் உல்சி' என்ற பாத்திரம் பேசுவது நினை வுக்கு வருகிறது. -

  • பெருமை என்பதன் ஆழமான பகுதிகளையும்

மேடான பகுதிகளையும் அனுபவித்தவனாகிய நான் கூறுகிறேன்.........' என்று உல்சி பேசுகிறான். ஆகவே தன் சொற்களுக்கு அதிகம் மதிப்புத் தர வேண்டும். என்கிறான் அவன். இது அடிகட்கும் முற்றிலும் பொருந் தும். இத்தகைய அனுபவங்களை அடிகள் பெறுமாறு இறைவன் பணித்தமைக்கு ஒரு காரணம் உண்டு. அவ ருடைய வாழ்க்கை முழுத்தன்மை பெற்றிருப்பின் மட்டுமே பிற்காலத்தில் அவர் பெறப் போகின்ற மாற்றம் முழுப் பயனைத் தரமுடியும். ஏனையோருக்கும் இத்தகைய இரு நிலைப்பட்ட அனுபவம் வாய்க்கிறதெனினும் அவர்கள் அதி லிருந்து ஒன்றையும் கற்றுக் கொள்வதில்லை. இன்பம் வரும் போது அதில் ஆழ்ந்து அனுபவிப்பதும், துன்பம் வருங் கால் அதனை ஏற்க மறுத்துப் போராடி மனத்துயர் எய்து வதும் சாதாரண மக்கள் மனநிலை. ஆனால் கீதை கூறுகிற "ஸ்திதப் பிரஞ்ளு மனநிலை வரவேண்டுமானால், இரட் டையை அதாவது 'இன்ப துன்பம் சூடு-குளிர்ச்சி’ என்பவற்றை ஏற்றுக் கொண்டு இரண்டிலும் ஒரே மன நிலையில் இருக்கப் பழக வேண்டும். ... இவை இரண்டினாலும் உந்தப்படாமல், பாதிக்கப் படாமல் இருக்கும் மன நிலையைக் கீதை'சமதிருஷ்டி'என்று கூறும். மணிவாசகரின் வளர்ச்சி இத்தகைய நிலையைப் பெற்றது. அமைச்சராக இருந்த பொழுதே இம்மன

  • “Say Wolsy, that once trod the depths and shoals of honour Found thee a way............” (Henry VIII].A. 3. S.2 line 435)

237

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/238&oldid=852684" இலிருந்து மீள்விக்கப்பட்டது