பக்கம்:மணிவாசகர்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சராக இருந்த காலத்திலேயே வாழ்வு முழுவதையுங் கண்டு அதன் நெளிவு சுளிவுகளை அறிந்து, முற்றிலும் அனுபவம் நிறைந்து அவற்றில் ஒரு சம நோக்கைப் பெற்று, முழுத்தன்மையுடன் விளங்கினார் என்றே நினைக்க வேண்டியுளது. இதனாலேயே திருப் பெருந்துறையில் எழுந்தருளியிருந்த ஞானாசிரியன் ஒரு சொல்லைச் சொன்னவுடன் முழுமாற்றத்தைப் பெற. முடிந்தது. சமநோக்கு என்பது நிரம்பியிருந்த காரணத் தால் ஞானாசிரியனின் சொற்கள் மூடியைத் திறந்துவிட் டதுபோல் ஆகிவிட்டது. இவர் அனுபவத்தில் முற்றுப் பெறவில்லையானால் இத்தகைய மனநிலை வருதலுங் கடினம்; வந்தாலும் அது நின்று நிலைத்துப் பயன்தரு தலும் கடினம். ஆதி சங்கரர் மண்டன மிசிரரோடு தர்க்கம் செய்யத் தொடங்கிய தாகவும், இச் சொற்போர் முடிவை அறி விக்கும் நடுநிலையாளராக மண்டன மிசிரரின் மனைவி யார் சரசுவதி தேவியார் அமர்ந்ததாகவும், தர்க்கத்தின் முடிவில், உலகின் ஒரு செம்பாதியாகிய பெண்ணையும் அவள் மன நிலையையும் அறியாதவர் என்றும் அவருடைய அனுபவம் முழுத் தன்மை பெறாதது என்றும் சரசுவதி தேவியார் சங்கரரை ஒதுக்கி விட்டதாகவும் கதை கூறப் படுகிறது. இக்கதை எத்துணைத் துாரம் உண்மையோ இல்லையோ அறியோம். எனினும் ஓர் உயர்ந்த கருத்தை உள்ளடக்கி நிற்கக் காண்கிறோம். மனிதன் உலக அனுபவம் முழுவதையும் பெற்றாலொழிய முழுத் தன்மை பெற முடியாது. இச் சட்டம் திருஞானசம்பந்தர் போன்ற சிவன் முத்தர்கட்குக் கிடையாது என்பதையும் அவர் போன்றோர் இதிலிருந்து விதிவிலக்குப் பெற்றோர் என்ப தையும் மனங் கொள்ளவேண்டும். எனவேதான் மணி வாசகர் இவர்களிலும் வேறுபட்டவரோ என்று நினைக் கத் தோன்றுகிறது. இக் கருத்து மேலும் ஆராய்வதற். குரியது என்ற அளவில் இதனை விட்டுவிடுகிறேன். 239

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/240&oldid=852690" இலிருந்து மீள்விக்கப்பட்டது